பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

544

saturation current : (மின்.) பூரித மின்னோட்டம் : பூரித மின்னழுத்தம் ஒரு தகட்டில் செலுத்தப்படும் போது எலெக்ட்ரான் குழல் வழியாகச் செல்லும் மின்னோட்டம்

saturation voltage : (மின்.) பூரித மின்னழுத்தம்: ஒரு வெற்றிடக்குழலின் தகடு, வெளிப்படும் எலெக்ட்ரான்கள் அனைத்தும் ஈர்க்கும் வகையில் அந்தத் தகட்டில் செலுத்தப்படும் மின்னழுத்தம்

saturation temperature : (மின்.) பூரித வெப்பநிலை : ஓர் எலெக்ட்ரான் குழலில் வெப்பநிலை மேலும் உயர்ந்தாலும் தகட்டின் மின்னோட்டம் அதிகரிக்காமலிருக்கும் போதுள்ள எதிர்முனை வெப்ப நிலை

saw : (மர.) ரம்பம் / ஈர்வாள்: பலகைகளை அறுப்பதற்கேற்ப வாள்போல் பற்கள் அமைந்த மெல்லிய தட்டையான உலோக அறுப்புக் கருவி

sawdoctor (பொறி.) ரம்பப்பல் எந்திரம் : ரம்பத்தின் பற்கள் செய்வதற்கான எந்திரம்

sawhorse : (மர.வே.) அறுப்பணைப்புச் சட்டம்: தச்சர்கள் பயன்படுத்தும் வழக்கமான சாய்கால். சில சமயம் இது 'X' வடிவ சட்டத்தையும் கொண்டிருக்கும்

saw set : (மர.வே.) ரம்பநெளிவுக் கருவி : ரம்பப் பற்களை இரு பக்கமும் திருப்புவதற்கான கருவி

ரம்ப நெளிவுக்கருவி (படம்)

sawtooth wave : (மின்.) ரம்பப்பல் அலை: இரம்பத்தின் பற்களைப் போன்று வடிவமுடைய அலை

saw toothed skylight : (க.க.) ரம்பப் பல் சாளரம் : ரம்பப் பற்களின் வடிவத்தில் முகப்புடைய மேல்தளச் சாளரம்

saw trimmer : (அச்சு.) ரம்பக் கத்திரி: அச்செழுத்து வரிப்பாளங்களையும், தகடுகளையும் செம்மையாகக் கத்திரித்து விடுவதற்குப் பயன்படும் ஒருவகை எந்திரம்

sawyer : (மர.வே.) மரம் அறுப்பவர் : ஆலையில் அல்லது களத்தில் ஒரு வட்ட ரம்பத்தை இயக்கி மரம் அறுப்பவர்

saxatile: (உ.யி.) பாறை உயிர்கள்: பாறைகளிடையே உயிர் வாழ்கிற உயிரினங்கள்

saybolt test : (தானி.) பசைச் சோதனை : எண்ணெயின் பசைத் தன்மையை அளவிடும் சோதனை

scaffold : (க.க.) சாரக்கட்டு : கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதாரமாகப் பயன்படும் தற்காலிகக் கட்டமைப்பு

scaffold height : (க.க.) சாரக்கட்டு உயரம் : சாரக்கட்டின் பல்வேறு நிலைகளுக்கிடையிலான இது பொதுவாக 4 அல்லது 5 இருக்கும். இந்த இடைவெளிக்குள் கொத்தனார் நின்று கொண்டு தன் வேலையைச் செய்வார்

scagliola : (க.க.) செயற்கை ஒப்பனைக்கல்: ஒப்பனைக்கல் போலியாகச் செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு. தளங்கள், தூண்கள் முதலியவற்றை அழகுபடுத்துவதற்கும் பிற உள் அலங்கார வேலைகளுக்கும் பயன்படுகிறது

scale : அளவுகோல் : (1) சிறு அளவுக் கூறுகள் குறிப்பிடப்பட்ட அளவு கோல்

அளவுகோல்(படம்)