பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

546

sciagraphy: (இயற்.) ஊடுகதிர் ஒளிப்படக்கலை: உட்புறம் தெளிவாகத் தெரியும்படி நேர்குத்து வெட்டாக ஒளிப்படம் எடுக்கும் கலை

scientific: அறிவியல் முறை: அறிவியலுக்குரிய திட்பநுட்பத்திறம் வாய்ந்த முறை

scissors truss (க.க.) கத்திரித் தாங்கணைவு: கத்திரி போன்று அமைப்புடைய ஒருவகை கூரைத் தாங்கனைவு. மண்டபங்கள், தேவாலயங்கள் போன்றவற்றின் கூரைகளைத் தாங்குவதற்கு இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

sclerometer: (பொறி.) உலோகத் திண்மைக் கணிப்புமானி : உலோகங்களின் கடினத் தன்மையைக் கணித்தறிவதற்கான ஒரு கருவி. உலோகத்தின் மேற்பரப்பில் இதனை ஒரு முறை முன்னேயும் பின்னேயும் பாய்ச்சிக் கிடைக்கும் சிம்பினை ஒரு தர அளவுடைய சிம்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கடினத் தன்மை கணக்கிடப்படுகிறது

sclerroscope : (உலோ.) திண்மை அளவு கருவி: ஒரு பொருளின் கெட்டித் தன்மையை அளவிடுவதற்கான ஒரு கருவி

sconce : மெழுகுத்திரி: அலங்கார மெழுகுவர்த்தி விளக்கு

scored cylinders : உள்வரி நீள் உருளை (தானி. எந்.): உந்து ஊர்தி போன்றவற்றின் எஞ்சின்களிலுள்ள பளபளப்பான நீர் உருளைகளின் சுவர்களில், நீர் உருளைக்குள் அயல் பொருட்களை உட்செலுத்துவதற்காக உள்வரியிடுதல். இவ்வாறு உள்வரியிட்ட உருளைகள் உள்வரி நீள் உருளைகள் எனப்படும்

scoring of pistons and cylinders : (தானி.) உள்வரியிடல் : நீள் உருளைகளுக்கும், சுழல்தண்டுகளுக்கும் முறையாக மசகிடுவதற்காக உள்வரியிடுதல்

scotia : (க.க.) தூண்டிக் குழிவு : ஒரு தூணின் அடிப்பகுதியில் காணப்படும் குழிவான வார்ப்படம்

scrap : (வார்.) உலோகச் சிம்பு: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் பயனற்றதென ஒதுக்கித் தள்ளப்படும் தேனிரும்புத் துண்டுகள். இத்துண்டுகளை மீண்டும் உருக்கலாம்

scraping: (எந்.) சுரண்டு மெருகு: ஒரு சுரண்டு கருவியுைப் பயன்படுத்தி தட்டையான மேற்பரப்புகளையும் தாங்கிகளையும் கையால் சுரண்டி மெருகிடுதல்

scrap iron : (உலோ.) துண்டு இரும்பு : ஒதுக்கித் தள்ளப்படும் இரும்பு அல்லது எஃகுத் துண்டுகள் அனைத்தையும் இது குறிக்கும். இதனைப் புதிய எஃகு தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்

scraper : செதுக்குக் கருவி : மரத்தின் பரப்புகளை வழவழப்பாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எஃகினாலான சுரண்டு கருவி. உலோகத் தொழிலாளர்களும் இதனைப் பயன்படுத்துவர்

scraper plane : (மர.வே.) செதுக்கு இழைப்புளி : இழைத்து வழவழப்பாக்குவதற்குப் பயன்படும் இழைப்புக் கருவி. தளங்களையும், பெரிய பரப்புகளையும் மட்டப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது

scratch : கீறல்: மேற்பரப்பில் ஏற்படும் கீறல், கீறுதடம் அல்லது கீற்றுவரி

scratch awl : (பட்.) கீற்றுத் தமருசி : உலோகத்தில் குறியிடுவதற்குப்