பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

548

கோல் : மரக்கட்டை, செங்கல் முதலியவற்றில் கோடுகள் வரை வதற்கான கூர்மையான கருவி

script : (அச்சு.) அச்சுருக் கையெழுத்து : கையெழுத்து போன்று வடிவமைத்த அச்சுரு

scroll : சுருள் போதிகை : சுருள் வடி அணியொப்பனை செய்த போதிகை

scroll saw : (மர.வே.) மெல்லிழை வாள் : சித்திர அறுப்பு வேலையில் மெல்லிய பலவகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்

scroll shears : (உலோ.வே.) சுருள் கத்திரி : ஒழுங்கற்ற வடிவுகளை சீராக வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கையினால் இயக்கக் கூடிய கத்திரி

scroll work : சுருளொப்பனை : மென்தோல் சுருளில் செய்யப்படும் ஒப்பனை வேலைப்பாடு

scutcheon or es-cutcheon : காப்புத் தகடு : சாவித் துளையில் சுழலும் காப்புத் தகடு

sea coal : (வார்.) கடல் நிலக்கரி : நியூகாசில் என்னுமிடத்திலிருந்து கடல் மூலம் முன்பு கொணரப்பட்ட மென்மையான நிலக்கரி

sealing compound : (மின்.) காப்புப் பொருள் : சேம மின்கலங்களில் அமில மின்பகுப்பான்கள் சிந்தாமல் தடுப்பதற்காக மின்முனைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினாலான, அமிலத்தை எதிர்க்கக் கூடிய, மின்கடத்தாத கூட்டுப் பொருள்

sealing wrappers : காப்பு உறைக் காகிதம் : சிப்பங் கட்டுவதற்காகவும் காப்பு உறையிடுவதற்காகவும் பயன்படும் பளபளப்பான காகிதம்

seam : மூட்டுவாய் : ஓர் உலோகத் தகட்டின் ஒரு முனை இன்னோர் உலோகத் தகட்டின் மடித்த முனையுடன் இணைத்துப் பொருத்திய மூட்டுவாய்

seaming iron : (உலோ.வே.) மூட்டுவாய் இரும்பு : உலோகத் தகட்டு வேலையின் வரிப்பள்ளம் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி

seam welding : மூட்டுவாய்ப் பற்றவைப்பு : ஓர் உலோகத் தகட்டின் ஒரு முனையை இன்னோர் உலோகத் தகட்டின் மடித்த முனையுடன் இணைத்துப் பற்றவைக்கும் முறை

seaplane: (வானூ.) முந்நீர் விமானம்: கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானூர்தி

seasoning modeling: பதப்படுத்திய உருப்படிவம்: வார்ப்படங்களுக்கு அரைச்சாந்து உருப்படிவங்களை உருவாக்கும் முறை. இதில் வார்ப்பட்ங்களும், ஊன்பசை வார்ப்படங்களுக்கான கூடுகளும் உறிஞ்சுவதைத் தடுக்கும் ஒரு பொருளினால் செய்யப்படும்

seasoning of lumber: (மர.வே.) வெட்டுமரப் பதப்பாடு: மரத்தைச் சூளையில் உலரவைப்பதன் மூலம் பதப்படுத்துதல். இது வெட்டு மரத்தைக் காற்றில் காயவிடுவதன் மூலம் இயற்கையாகப் பதப்படுத்துவதிலிருந்து மாறுபட்டது

secant (கணி.) வெட்டுக்கோடு: செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய் வரை அடி வரைகளின் விகிதம்

secondary: (மின்.) கிளர்மின் கம்பிச்சுருள்: கிளர் மின்னோட்டத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிச் சுருள். இது அடிப்படைக்