பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

550

அழுத்தம் காரணமாக உண்டாகும் படிவியற்படுகைப் பாறை

seeback effect : (.மின்) பின்னோக்கு விளைவு: வேறுபட்ட இரண்டு உலோகங்களை ஒன்றோடொன்று ஒட்ட வைத்துச் சூடாககுவதன் மூலம் அனல் மின்விசை உண்டாக்கும் விளைவு

seeker: ஆய்வு தொலைநோக்காடி: ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் தொலைநோக்காடி

segment: வெட்டுக்கூறு: ஒரு வட்டத்தின் நாண் வரைக்கும் அதன் வில்வரைக்கும் உள்ளீடானப் பகுதி

segmental arch: (க.க.) பிறை வில் வளைவு: மையம் உள்ளடங்கலாக இல்லாத பிறை வில் வளைவு

segmental rack or segmental Wheel : (எந்.) பிறைமச் சக்கரம்: வில்வரைக் கூறு வடிவமுடைய விசைப் பற்சக்கரம்

segregation : தனிமையாக்கம்: மணியுருவாக்க வகையில் பொதுப் பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடி உருவாக்குதல்

seismogram: (இயற்.) நிலநடுக்கப் பதிவு : நிலநடுக்கக் கருவி தரும் நிலநடுக்கப் பதிவு

seismography: (இயற்.) நில நடுக்க ஆய்வியில்: நிலநடுக்கம் பற்றிய ஆய்வியல் துறை

seize: சிக்குறுதல்: வழக்கமாக ஒன்றன் மீது ஒன்று தங்கு தடையின்றி உருளும் மேற்பரப்புகள், மசகு போதாமல் உண்டாகும் உராய்வு காரணமாக ஏற்படும் வெப்பத்தினால் ஒன்றோடொன்று ஒட்டி சிக்குறுதல்

selective fading: (மின்.) தெரிவுத் தேய்வுறல்: வானொலி வாங்கியில், சமநீளமில்லாத பன்முகப் பாதைகளின் வழியாக ஒரு சைகையை வாங்கும் போது, அந்தச் சைகை ஓரளவுக்குக் குறைந்து அல்லது நிலையிழந்து இருக்கும் நிலை

selectivity: தேர்திறம் : வானொலிகளின் ஏற்பு அமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படும் திறம்

selenium: (மின்.) செலினியம் (மதிமம்): இது ஓர் அலோகத் தனிமம். ஒளிக்கற்றைக்கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளும் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம். இது ஒளிக்கடப்பு மின்கலங்களிலும், உலோகத் திருத்திகளிலும் பயன்படுகிறது

seleno centric: (விண்.) சந்திர மையம்: சந்திரன் கோளின் மையத்திலிருந்து பார்த்தாற் போன்ற தோற்றம்

self acting: தற்செயற்பாடு: புறத் தூண்டுதல் இல்லாமல் தானாகவே செயற்படுதல்

self-bias: (மின்.) தற்சார்பு: ஒரு வலைத் தடுப்பான் வழியாக எலெக்ட்ரான்கள் பாயும் போது உண்டாகும் தற்சார்பு

self excitation : (மின்.) தற்கிளர்ச்சி : நேர்மின்னோட்ட மின்னாக்கியின் இணைப்புகளிலிருந்து பெறும் நேர்மின்னோட்டத்தினை, அதன் மின் காந்தப்புலனுக்கு மின்னோட்டம் அளிப்பதற்காகத் அளித்தல்

self-excited : (மின்.) தற்கிளர்ச்சி மின் பொறி : தனது புலத்திற்கு அளிப்பதற்காக தனது சொந்த மின்னோட்டத்தை உண்டாக்கிக் கொள்ளும் பொறி