பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
551

self excited alternator: (மின்.) தற்கிளர்ச்சி மாறு மின்னாக்கி: இது ஒரு மாற்று மின்னோட்டம் உண்டாக்கும் கருவி. இது தனது முதன்மைப் புலங்களுக்கு காந்தமூட்டுவதற்காக, நேர்மின்னோட்டம் உண்டாக்கும் பல வழிமுறைகளில் ஒன்றின் மூலம் நேர்மின்னோட்டத்தை உண்டாக்குகிறது

self hardening steel : (உலோ.) தானாகக் கெட்டிப்படுத்திய எஃகு : காற்றில் குளிர்விப்பதன் மூலமாக தானாகச் கெட்டிப்படுத்தப்படும் ஒரு கலவை எஃகு. இது கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது

self-induced current : (மின்.) தற்தூண்டல் மின்னோட்டம் : ஒரு மின்கம்பிச் சுருளில் காந்தப்புலம் திசையில் அல்லது செறிவில் மாற்றமடையும்போது அதே கம்பிச் சுருளில் அமைந்துள்ள தற்தூண்டல் மின்னியக்கு விசையினால் உண்டாகும் மின்னோட்டம்

self-inductance : (மின்.) தற்தூண்டம் : ஒரு மின் சுற்று வழியில் கம்பிச்சுருளின் திருப்பங்களிடையே நிகழும் மின்காந்தத் தூண்டல் என்னும் நிகழ்வு

self-induction : (மின்.) தற்தூண்டல் : ஒரு மின் கம்பிச் சுருளின் காந்தப்புலம் அதன் மீதே ஏற்படுத்தும் தூண்டல் விளைவு

selvage : ஆடை விளிம்பு : ஆடை கிழிப்பதற்குரிய திண்ணிய ஊடு விளிம்பு

semaphore : விளக்கக் கைகாட்டி: அசையும் கைகளும் சைகை விளக்கமைப்பும் கொண்ட இருப்புப் பாதைக் கைகாட்டி மரம்

semiautomation : பகுதி தானியக்கம் : எந்திர இயக்கியைத் தடைசெய்யாமல் உற்பத்திக்கு உதவி செய்கிற தானியங்கிக் கருவிகள்

semielliptio spring : (தானி.) அரை நீள்வட்ட விற்சுருள்: ஏறத்தாழ அரைநீள் வட்ட வடிவில் உள்ள விற்சுருள். உந்து ஊர்திகளில் இது மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது

semíchord : அரைநாண் : ஒரு வட்டவரையின் நாணின் நீளத்தில் சரிபாதி

semicircle : அரைவட்டம் : வட்டத்தின் சுற்றுவரைக் கோட்டுக்கும் விட்டத்திற்கும் உள்ளடங்கிய அரைவட்டம்

semicircular archi (க.க.) அரை வட்டக் கவான் : வளை முகட்டின் உட்புற வளைவு அரைவட்டமாகவுள்ள கவான்

semiconductor : (மின்.) ஓரளவு மின்கடத்தி : தாழ்வெப்ப நிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள். இதன் தடைத் திறன், மின்கடத்திகளுக்கும் மின்காப்பிகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்

semiconductor ‘n’ type: (dor.) :N வகை ஓரளவு மின்கடத்தி: எலெக்ட்ரான்களை முக்கிய ஊர்தியாகப் பயன்படுத்தும் ஓரளவு மின் கடத்தி

semiconductor ‘p' type ; "P" வகை ஓரளவு மின்கடத்தி: துவாரங்களை முக்கிய ஊர்தியாகப் பயன்படுத்தும் ஓரளவு மின்கடத்தி

semi-steel.: (உலோ.) மிகுவலி எஃகு: உருகிய தேனிரும்புடன் ஒரு பகுதி எஃகுச் சிம்புகளைச் சேர்ப்பதின் மூலம் தயாரிக்க மிகுவலிமை வாய்ந்த வார்ப்பிரும்பு

semi-transparent: ஓரளவு ஒளி ஊடுருவும் பொருள்: ஒளி ஓரளவு ஊடுருவிச் செல்லக் கூடிய பொருள். இதில் பொருள் அரை குறையாகவே தெரியும்