பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

554

டுப்படுத்தும் வகையில் அக்கட்டிடத்தின் மின் கம்பி அமைப்பின் நுழைவாயில் நுனியில் செருகப்பட்டுள்ள இணைப்பு விசை

service tank : (வானூ.) எரிபொருள் கலம் : ஒவ்வொரு மின் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ள நிலையான எரிபொருட் கலம். இதனுள் மற்ற கலங்களிலிருந்து எரிபொருள் இறைத்துச் செலுத்தப்படும். இக்கலத்திலிருந்து எஞ்சினுக்கு எரிபொருள் எடுத்துக் கொள்ளப்படும்

service wires: (மின்.) மின் வழங்கு கம்பிகள் : ஒரு கட்டிடத்திலுள்ள மின் சுமையுடன் இணைந்த மின் வழங்கீட்டுக் கம்பிகளை ஒரு மின்மாற்றியிலிருந்து மின் வழங்கீட்டு ஆதாரத்துடன் இணைக்கும் மின் கம்பிகள்

servo control : (வானூ.) பணிப்புக் கட்டுப்பாடு : வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல் இடைமாற்றீடு மூலம் விமானம் ஓட்டியின் முயற்சிக்கு ஆதாரமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம்

servo motor: பணிப்பு முன்னோடி

sesqui-plane: (வானூ.) குறையலகுப் பரப்பு விமானம் : ஒரு சிறகின் பரப்பளவு இன்னொரு சிறகின் பரப்பளவில் பாதிக்கும் குறைவாகவுள்ள ஒருவகை இருதள விமானம்

set screw (எந்.) சதுரத் திருகு : சதுர வடிவ அல்லது வேறு வடிவக் கொண்டையுடைய சமதளங்கொண்ட திருகு. இது நகர்த்திச் சரியமைவு செய்யக் கூடிய உறுப்புகளை உரிய நிலையில் நிறுத்தி இறுக்குவதற்குப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பப் பதனாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது

set square : முக்கவர் : செங்கோண முக்கோண வடிவ வரை கருவி

setting hammer : (உலோ.) பொருத்துச் சுத்தி : ஒரு முனை கூரிய முனையுட்ன் சாய்தளமான கொண்டையுடையதாகவும், இன்னொரு தட்டையான முனையுடையதாகவும் சதுரமான அடிக்கட்டையுடன் செய்த சுத்தி. இது முனைகளில் அல்லது கோணங்களில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படுகிறது

settle : விசிப்பலகை : உயர் சாய்மானமும் கைகளும் அடியில் அறைப் பெட்டிகளும் உடைய விசிப்பலகை

settlement : (மர.வே.) அமிழ்வு : நிலம், கட்டிடம், சுவர் ஆகியவற்றின் அமிழ்வு. பொதுவாக அடித்தளத்தின் வலுக்குறைவு, கட்டுமானப் பொருள்களின் தரக் குறைவு. பதப்படுத்தப்படாத மரம் ஆகியவற்றினால் இது ஏற்படுகிறது

severy: (க.க.) குவிமாடமோடு : பல்கெழு வளைவுக் குவிமாட மோட்டுப் பகுதி

sevres: சீனமங்கு : விலைமிகுந்த சீனக் களிமண்ணினாலான அலங்கார மங்குப்பாண்டவகை

sewage :(கம்மி.) சாக்கடைநீர் : கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக் கழிவுப் பொருட்கள்

sewer :(கம்மி.) கழிவு நீர்க்கால் : நகரக் கழிவுநீர்க் குழாய்

sextant (கணி.) மாலுமிக் கோணமானி : மாலுமிகள் பயன்படுத்தும் நிலப்பரப்பாய்வுக் கோணமானி. ஆறுகோண வட்டப்பகுதி: வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி