557
கண்ணுக்கும் முகத்துக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் கேடயம். இதில் ஒரு தனிவகை ஆடி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்சுடரை தீங்கின்றி நேரடியாகப் பார்க்கலாம்
shielded arc : (பற்.) காப்புச் சுடர்: கனமான உருகும் பொருள் பூசப்பட்ட மின்முனை பயன்படுத்தப்படும் ஒரு வகை மின்பற்றவைப்பு முறை
shielded cable : (மின்.) காப்பிட்ட கம்பிவடம் : பின்னல் கம்பி வலையினால் காப்பிடப்பட்டுள்ள மின் கம்பி அல்லது கம்பி வடம்
shifter forks: (பட்.) இடமாற்றுக் கவடு: ஒரு வார்ப்பட்டையில் கால்பரப்பி, அதனைக் கப்பியை இறுக்குவதற்கும், இறுக்கமான கப்பியைத் தளர்த்துவதற்கும் பயன்படும் கரம்
shim: (எந்.) சிம்பு: பொறிப் பகுதிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் மெல்லிய துணுக்கு
shimmy: (தானி.) முன்சக்கர அதிர்வு: உந்து ஊர்திகளில் முன் சக்கரங்கள் அதிர்வுறுதல். சீரற்ற கம்பிச்சுருள் அமைப்பு டயரில் சமனற்ற காற்றழுத்தம், மறையாணிகள் கழன்றிருத்தல் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம் முன் சக்கர அதிர்வு சிம்பு (படம்)
shooting star: (விண்.) எரிமீன்: விண்ணிலிருந்து எரிந்து வீழ்கின்ற விண்மீன்
shingles: (க.க.) அரையாப்பு: கூரைகளையும், பக்கச் சுவர்களையும் மூடுவதற்குப் பயன்படும் மரத்துண்டுகளிலான அல்லது பிற பொருள்களினாலான சிறிய துண்டு. இதன் கனம் 16செ.மீ. முதல் 1.27செ.மீ. வரை இருக்கும்
shipping measure: கப்பல் அளவை: ஒரு கப்பலின் உள் கொள்ளளவினை அளவிடுவதற்கான அளவுமுறை. 1 பதிவு டன் - 100 கன அடி கப்பல் சரக்குகளை அளவிடுவதற்கு 1 யு.எஸ். கப்பல் டன் = 40 கனஅடி=32,143 யு.எஸ். புஷல்கள்
ship plane: (வானூ.) கப்பல் விமானம்: கப்பலின் மேல் தளத்திலிருந்து ஏறவும், அதில் வந்து இறங்கவும் ஏற்ற வகையில் கட்டப்பட்ட விமானம்
shock: (பொறி.) அதிர்வு: திடீரென விசையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் திடீர் அதிர்ச்சி
shock absorber: (வானூ.) அதிர்வு தாங்கி: விமானம் தரையில் இறங்கும் போதும், தரையிலிருந்து ஏறும்போதும் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதி
shoe: (எந்.) உராய்வு தடைக் கட்டை: ஊர்திகளின் சக்கர உராய்வு தடைக்கட்டை
shopwork: பட்டறைப்பணி: பட்டறையில் செய்யப்படும் எந்திரவியல் பணி
shore: (க.க.) உதைவரிக்கால்: கப்பல் கட்டுதளத்தில் கப்பலைத் தாங்கி நிற்க வைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச் சாய்த்து நிறுத்தப்படும் வரிக்கட்டைகள்
shoring: (க.க.) உதை வரிக்காலிடுதல்: உதை வரிக்கால் கொடுத்துதாங்கி நிறுத்துதல்
short circuit: (மின்.) மின்குறுக்குப் பாய்வு: மின் சுற்றுவழியில் குறுக்கு வெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நின்றுவிடுதல்
short circuit fault: மின் முடிப்புப் பிழை: