பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

558

shortline: குறுமின்வழி

short rib: (உட.) குறுவிலா எலும்பு : மறுபுறம் மூட்டுச் சேராத விலா எலும்பு

short-sight: (நோயி.) கிட்டப் பார்வை: அணுக்கப் பார்வைக் கோளாறு

short-time duty: (மின்.) குறுகிய நேர மின்னோட்டப்பணி: ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு ஒரே சீரான அளவில் மின்னோட்டம் தேவைப்படும் பணி

short ton: குறுஎடையளவு: இரண்டாயிரம் கல் எடை அளவு

short waves: (மின்.) சிற்றலை: பத்து முதல் நூறு மீட்டர் வரை நீளமுள்ள வானொலிக் குற்றலை

short wave radio: குற்றலை: புத்து முதல் நூறு மீட்டர் வரை நீளமுள்ள வானொலிச் சிற்றலை

short weight: குற்றெடை: ஒன்றுக்குக் குறைந்த அலகுடைய சில்லறை எடை

shot effect : (மின்.) வெடிப்பு விளைவு: ஓர் எலெக்ட்ரான் குழிலில் எதிர்முனையிலிருந்து வெளிப்படும் எலெக்ட்ரான் வீதங்களில் ஏற்படும் மாறுபாடு காரணமாக உண்டாகும் ஒலி

shoulder-blada: (உட.) தோள் எலும்பு: தோளிலுள்ள பட்டை எலும்பு

shoulder-brace: (உட.) தோள் மூட்டு: தோள் எலும்புகளின் மூட்டு

shrine: (க.க.) கோயில்: புனிதப் பேழை

shrinkage : (வார்.) அளவுக் குறுக்கம்: வார்ப்படத்தைக் குளிர்விக்கும் போது அதன் வடிவளவையும், எடையையும் உருவத்தையும் துல்லியமாக இருத்தி வைத்துக் கொள்வதற்காகச் சுருங்கும் அளவு

shrinkage crack (வார்.) சுருங்கு வெடிப்பு: வார்ப்படத்தின் உறுப்புகளை ஏற்றதாழ்வுடன் குளிர்விக்கும் போது வார்ப்படத்தில் உண்டாகும் வெடிப்பு

shrink holes in castings: (வார்.) வார்ப்படச் சுருங்கு துளைகள்: ஏற்றத்தாழ்வான குளிர்விப்பு மூலம் வார்ப்பட உறுப்புகளில் ஏற்படும் பள்ளங்கள்

shrinking : (எந்.வார்.) சுரிப்பு: குளிர்விக்கும்போது வார்ப்படத்தில் ஏற்படும் சுருக்கம்

shroud: (எந்.) தட்டை விளிம்பு: பல்லிணைச் சக்கரத்தின் பற்களின் முனைகளில், அப்பற்களின் வலிமையை அதிகரிக்க அல்லது வழுவழுப்பான இயக்கத்திற்கு வசதி செய்ய இணைக்கப்படும் அல்லது வார்ப்பு செய்யப்படும் தட்டையான விளிம்பு

shrouded wheels : (தானி.) மூடு சக்தரங்கள்: தொடர் உந்து ஊர்திகளில் தீத்தங்கிகளில் பக்கப்பட்டிகள் மூலம் அடைக்கப்பட்ட சக்கரங்கள்

shunt (எந்.) இணை : இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைக்கும் மின் கடத்துக் கட்டை

shunt for ammeter : (மின்.) அம்மீட்டர் இணை : மின்மானி வழியாகச் செல்லும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மீட்டருடன் இணையாகப் பொருத்தப்பட்டுள்ள தடை

shunt generator: (மின்.) இணை மின்னாக்கி: காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள் சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம்