பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

560

மானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள்

siding (க.க.) புடைமரம் : கட்டிடத்தின் புறச் சுவர்களுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படும் வெட்டு மரம்

sienna : (விண்.) சீயெனா மண் : சாயப்பொருள் தரும் காவிக் களி மண் வகை

sieve : (க.க.) சல்லடை : மணலிலிருந்து பெரிய கற்களைப் பிரித்தெடுப்பது போன்று. பொருள்களை வடிவளவுக்கேற்பப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் சலித்துப் பிரிக்கும் கருவி

sight-feed lubricator : (எந்.) காட்சியூட்டு மசகுப் பொருள்: எண்ணெய் பாய்வது அல்லது பாயாமலிருப்பது எப்போதும் கண்ணுக்குப் புலனாகத் தக்கதாக அமைந்துள்ள ஒரு மசகுப்பொருள்

sight glass : (குளி.பத.) காட்சிக் கண்ணாடி : ஒரு திரவத் தொட்டியில் திரவத்தின் மட்டத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு கண்ணாடி

signal : (மின்.) சமிக்ஞை : ஒரு செய்தித் தொடர்புச் சாதனத்தின் வழியாக அனுப்பப்படும் செய்திக்கு நேரிணையான மின்னியல் அலை

signal strength : (இயற்.) சமிக்ஞை ஆற்றல் : கம்பியில்லாத்செய்தி தந்தியின் சுட்டுக்குழிச் ஏற்பாற்றல்

signal தொலைக்காட்சிச் சைகை: தொலைக்காட்சிகளை ஒளி பரப்புவதில் இரு வகைச் சைகைகள் உண்டு. ஒன்று பட அல்லது ஒளிச் சைகை, இன்னொன்று ஒலிச்சைகை. ஒவ்வொரு சைகையும் அது ஒலியை அல்ல்து ஒளியை அனுப்புவதற்கேற்ப மின்னியல் தூண்டல்களைக் கொண்டிருக்கும்

signal ganerator : (மின்.) சமிக்ஞை உருவாக்கி : ஒரு வானொலி அலைவெண் தொடர் அலையை அல்லது அலைமாற்றிய தொடர் அலையை உண்டாக்குகிற ஒரு மின்னணுவியல் சோதனைக் கருவி

signal to noise ratio : (மின்.) சமிக்ஞை-ஒலிவீதம் : வானொலிச் சாதனம் அனுப்பும் சமிக்ஞைக்கும் அந்தச் சாதனத்திற்குள் உண்டாகும் ஓசைக்குமிடையிலான விகிதம்

signature : (அச்சு) அச்சு முழுத்தாள் வரிசைக் குறி: ஒரு நூலில் பல்வேறு பிரிவுகள் எந்த வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுவதற்காக ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்படும் எண் குறியீடுகள்

signature press : (அச்சு.) தாள் அழுத்து கருவி : அச்சு முழு மடித் தாள்களை ஒன்றாக இணைத்து அழுத்துவதற்காகப் புத்தகம் கட்டுமானம் செய்வோர் பயன்படுத்தும் ஒரு சாதனம்

silencer (மின்) ஓசையடக்கு கருவி: சமிக்ஞைகள் எதுவும் வாராதிருக்கும்போது, ஏற்பியைச் செயலிழக்கச் செய்யும் மின் சுற்றுவழி

silica : சிலிக்கா (SiO2) : மணலிலும் பளிங்குக் கல் வகைகளிலும் புெருங் கூறாய் அமைந்த மணற்சத்து

silicon : (கனி.) கன்மம்: உலோகமல்லாத மணற்சத்து பெருமளவாகவுள்ள ஒரு தனிமம். கார்பனையும், பளிங்குக்கல்லையும் ஒரு மின் உலையில் சூடாக்குவதன்