பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
561

மூலம் இது கிடைக்கிறது. எஃகுத் தயாரிப்பில் கெட்டியாக்குவதற்கும் ஆக்சிகர நீக்கத்திற்கும் இது பயன்படுகிறது

silicon carbide : சிலிக்கன் கார்பைடு : மின் உலையில் மணல் கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாககும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும் பொருளாகவும் உராய்வுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது கார்போரண்டம் கிறிஸ்டோலான் கார்போஃபிராக்ஸ் கார்போரா, கார்போரைட், கிரிஸ்டோலைட் என்று பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது

silicon copper : (உலோ.) சிலிக்கன் செம்பு: துவாரங்கள், புடைப்புகள், இல்லாமல் சுத்தமான, திண்மையான வார்ப்படங்கள் தயாரிப்பதற்காக உருகிய செம்புடன் சேர்க்கப்படும் செம்பு மிகுதியாக அடங்கிய ஒரு வகை உலோகக் கலவை

silicon diode: (மின்.) சிலிக்கன் இரு முனையம் : மின்வெப்பம் கடத்தாத இரு முனையம்

silicon resins : சிலிக்கோன் , பிசின் : சிலிக்காவிலிருந்து பெறப்படும் பிசின் வகை. இது வெப்பக் கடத்தலைத் தடுக்கக் கூடியது; வேதியியல் பொருள்களின் அரிமானத்தையும் தடுக்க வல்லது சிறந்த மின்னியல் பண்புகள் கொண்டது

silicon steel : (உலோ.) சிலிக்கன் எஃகு : 1% முதல் 2% வரை சிலிக்கான் அடங்கிய எஃகு. இது கம்பிச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுகிறது

sill : (க.க.) பலகணிப் படிக் கட்டை : கதவு அல்லது சன்னல் அடியிலுள்ள மரத்தினாலான அல்லது கல்லினாலான அடித்தளம்

sill high : (க.க.) வாயிற்படிக்கல் உயரம் : தரை முதல் வாயிற்படிக்கட்டை வரையிலான உயரம்

silo : (விண்.) ஏவுகணைக் காப்பிடம் : ஏவுகணைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கானக் காப்பிடம். இது தரையில் கெட்டியான செங்குத்துத் துவாரமுடையதாகவும், ஏவுகணையைச் செலுத்தும் நிலைக்கு உயர்த்துவதற்கு அல்லது நேரடியாக காப்பிடத்திலிருந்தே செலுத்துவதற்கு ஏற்ற வசதிகளை உடையதாகவும் இருக்கும்

silt : வண்டல் : ஓடும் தண்ணீரினால் படியும் நுண்ணிய சேற்றுப் படிவு

silumin : (உலா.) சிலுமின் : அலுமினியமும், சிலிக்கனும் கலந்த ஒரு வகை ஜெர்மன் உலோகக் கலவை. மிகுந்த நெகிழ் திறனுடையது; குறைவாகச் சுருங்கக் கூடியது. இதனால நுட்பமான வார்ப்படங்கள் செய்யப் பயன்படுகிறது

silver : (கனி) வெள்ளி :வெள்ளை நிறம் கொண்ட நெகிழ் திறன்கொண்ட தகடாக்கக்கூடிய ஓர் உலோகம். இதன் உருகுநிலை 1750°F ஒப்பு அட்ர்த்தி தூய்மைக்கேற்ப 10 முதல் 11

silver solder : வெள்ளிப் பற்றாசு: ஒரு பகுதி செம்பும் 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியம் கொண்ட சிறு திற உலோகக் கலவை. அணிகலன் தயாரிப்போர் இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர்