565
skidding: (வானூ.) பக்கச் சறுக்கு: விமானம் திரும்பும்போது பக்கவாட்டில் சறுக்குதல்
skimmer: (வார்.) ஏடு எடுக்கும் கரண்டி: வார்ப்பட வேலையில் உருகிய உலோகத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுப்பதற்குப் பயன்படும் கரண்டி
skim milk: ஏடு எடுத்த பால்: ஆடை அகற்றப்பட்ட பால்
skimming:(வார்.) ஏடு எடுத்தல்: உருகிய உலோகத்தை ஊற்றும் போது படியும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுத்தல்
skimming-dish: விரை மெல் விசைப்படகு: தட்டையான அடிப்பகுதியினையுடைய விரைந்து செல்லும் பந்தய விசைப்படகு
skin: மென்தோல்: விலங்கிலிருந்து எடுக்கப்பட்ட பதப்படுத்திய அல்லது பதப்படுத்தாத மெல்லிய தோல்
skin-effect : (மின்.) புறம் பரவு விசை: ஒற்றை மாற்று மின் வலி வகையில் மின்கடத்தியின் புற நிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை
skin-friction : பக்க உராய்வுத் திறம் : கப்பல் வகையில் பக்கநீர் உராய்வுத் திறம்
skin-grafting: (மருத்.) தோல் ஒட்டு மருத்துவம் : உயிர்த்தோல் ஒட்டும் அறுவை மருத்துவம்
skinning : (மின்.) மின் காப்பி உரிப்பு : மின்னிணைப்பிகள் கொடுப்பதற்கு முன்பு மின் கடத்திகளிலிருந்து மின்காப்பிகளை உரித்தெடுத்தல்
skip: அலைத் தாவல் : வானொலி பரப்பில், ஒரு வான் அலையானது பூமியின் பரப்புக்கு மீண்டும் திரும்புவதால் உண்டாகும் விளைவு
skip distance : (மின்.) தாவல் தொலைவு : வானொலி பரப்புக்கும் வான் அலை பூமிக்குத் திரும்புகிற இடத்திற்குமிடையிலான தொலைவு. அலைவெண், நாளின் நேரம், புவியியல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து இது மாறுபடும்
sky-rocket : (இயற்.) வான் ராக்கெட்: வானத்தை நோக்கி நேராக உயர்ந்து விசையுடன் பாயும் ராக்கெட்
skirting: (க.க.) அகச் சுவரோரப் பட்டி : சுவரும் தரையும் சந்திக்குமிடத்தில் சுற்று விளிம்பாக அமைக்கப்பட்டுள்ள பட்டை
skiver : தோலாடை : தோலைச் சீவிப் பெறப்படும் மென்தோல். இது புத்தகக் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது
skiver leather : சீவிய மென் தோல் : தோலைச் சீவிப் பட்டையாக எடுத்த மெல்லிய தோல். அட்டைப்பெட்டிகள் பணப்பை முதலியவற்றில் உள்வரியிடவும், புத்தகக்கட்டுமானத்திலும் பயன்படுகிறது
skylight : (க.க.) மேல்தளச் சாளரம் : கட்டிட மேல் முகட்டில் அல்லது கூரையில் வெளிச்சத்திற்காக அமைக்கப்படும் கண்ணாடிச் சாளரம்
skyscraper : (க.க.) வானளாவி : இன்றுள்ள அலுவலகக் கட்டிடங்களைப் போன்று பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடம்
sky sign : மீமுகட்டு விளம்பரம் : உயர் கட்டிடங்களின் உச்ச உயர்