570
snider rifle : பிட்டச் சுழல் துப்பாக்கி : பின் எழியே மருந்துக் குண்டு அடைக்கப் பெறும் சுழல் துப்பாக்கி வகை
snifting-valve : ஏகுழி : நீராவிப் பொறி உந்து தண்டுக் குழலின் காற்று வெளியிடும் தடுக்கிதழ்
snips : (உலோ.வே.) உலோகத் திரி : உலோக வேலைப்பாட்டுத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உலோகத் தகடுகளை வெட்டுவதற்கான கத்திரி
snow : வெண்புள்ளி : தொலைக் காட்சியில் ஓசை அல்லது வலுவற்ற சமிக்ஞை காரணமாக உண்டாகும் இடையீடு. இது படத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றும்
snow blindnss : பனிக் குருடு : பனிப்பாள ஒளி வீச்சினால் ஏற்படும் பார்வைக்கேடு
snow blink : பனிவுரு நிழல் : வானத்தில் தோன்றும் பனிப் படலத்தின் ஒளி நிழல்
snow-guage : பனிவீழ்வு மானி : பூமியில் பெய்யும் பனியின் அளவைக் கணக்கிடும் அளவு கருவி
snow-plough : பனிவாரி : பாதைகளிலிருந்து பனி அடைவுகளை அகற்றுவதற்கான கருவி
snubber : (தானி.) அதிர்ச்சி தாங்கி : விற்சுருளின் பின்னதிர்வைக் குறைத்து, ஆட்டத்தைக் குறைப்பதற்காக அச்சுக்கும் சட்டகத்திற்குமிடையில் இணைப்பாகப் பயன்படுத்தப்படும் எந்திர அமைவு.இது ஒரு முரசு விற்சுருள் உராய்வுப்பட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்
soaking: (தானி.) தோய்வுறுத்தல்: எஃகில் முழுமையான ஒரே சீரான ஊடுபரவல் ஏற்படும் வரையில் எஃகை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருத்தல்
soaking pit : (உலோ.) உலோக உருக்கு உலை: உருட்டுவதற்கு ஆயத்தமாக உலோகப் பாளங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் ஓர் உலை
soar : (வானூ.) வானில் வட்டமிடல் : விமானம் தற்செலுத்தமின்றி உயர் வானவெளியில் மிதந்து தவழ்தல்
socket : (மின்.) புதைகுழி : வெண்சுடர் விளக்கின் அல்லது செருகின் திருகிழைப் பகுதி பொருத்தப்பட்டுள்ள கொள்கலம். இதனைப் பொதுவாக ஊர்திக் கொள்கலம்' என்பர்
socket chisel : (மர.வே.) குதை குழி உளி: தச்சர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உளி. இதன் மேற்பகுதி, ஒரு குதை குழிக்குள் செருகப்பட்டு, அதில் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும் குதை குழி உளி(படம்)
socketing : (அ.க.) குதை குழியில் பொருத்தல் : ஒரு மரத்துண்டை இன்னொரு மரத்துண்டின் உட்குழிவுக்குள் செருகுவதன் மூலம் இணைக்கும் ஒரு முறை
socle : (க.க.) அடிப்பீடம் : ஒரு சுவர் அல்லது தூணின் அடிப்பீடப்பகுதி
soda ash : சோடாக்காரம் : (NaCO3) தூய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது
soda or sodium carbonate : (வேதி.) உவர்க்காரம் (சோடா) : இதனை சோடியம் கார்போனேட் என்றும் கூறுவர். இது வீடுகளி