பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

572

soil stack : (கம்மி.) கழிநீர்க் குழாய் : கழிவுநீர்ச் சாக்கடை அமைப்பில் பயன்படுத்தப்படும் செங்குத்தான கழிநீர்க் குழாய்

sol : (குழை.) இழுதுப்படலம்: ஒரு திரவத்தின் கரைசல் அல்லது இழுதுநிலைப் படலம்

solar engine: (எந்.பொறி.) சூரிய ஒளி எந்திரம் : பெருமளவு கண்ணாடிப் பரப்பில் சூரிய ஒளி படுவதால் உண்டாகும் வெப்பத்தினால் இயங்கும் எந்திரம்

solarium : (க.க.) கதிரொளிக் கண்ணாடி மனை: மருத்துவ நலம் கருதிய கதிரொளிக் கண்ணாடி மனை

solar wind : (இயற்.) சூரியக் காற்று: சூரியனிலிருந்து புறமாக இடைவிடாது நகர்ந்து கொண்டிருக்கும் புரோட்டான்களின் தாரை

solder : (உலோ .) பற்றாசு : உலோகங்களை வெப்பத்தின் மூலம் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகக் கலவை. இது பொதுவாக ஈயமும், வெள்ளீயமும் சம அளவில் கலந்ததாக இருக்கும். இதன் உருகுநிலை சுமார் 188°C (370,4°F)

soldering : (எந்.) இடையிணைப்பு : ஒத்திராத உலோகங்களை அல்லது உலோகக் கலவைகளை உரிய வெப்பநிலையில் பற்றாசு வைத்து இணைத்தல்

soldering copper : (எந்.) பற்றாசு செம்பு : பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை இடையிணைப்பு இரும்பு என்றும் அழைப்பர் பற்றாசு செம்பு(படம்)

soldering flux : பற்றுப் பொருள் : உலோகங்களைப் பற்ற வைத்திணைக்கப் பயன்படும் சிறு திற உலோகம்

soldering furnace : (உலோ .) பற்றாசு உலை : பற்றவைக்கும் செம்பினைச் சூடாக்குவதற்கான மேசை வடிவ வாயு உலை

soldering iron: பற்றாசுச் சூட்டுக்கோல் : பற்றாசு வைக்கப் பயன்படும் கொதிநிலைச் சூட்டுக்கோல்

sole : (க.க.) அடிக்கட்டுமானம் : குமிழ் முகப்பினைத் தாங்குவதற்கான அடித்தளத்தின் உச்சியில் அமைக்கப்படும் அடிக்கட்டுமானம்

solenoid : (மின்.) மின்கம்பிச் சுருள் உருளை : ஒரு மின்காந்தத் திருகுச் சுழல். ஒருநேரான அல்லது வளைவான அச்சினைச் சுற்றி ஒரே திசையில் சமமான வட்ட மின்னோட்டம் பாயும் ஓர் அமைப்பு

solenoid relay : (தானி; மின்.) மின் உருளை அஞ்சல்: சேற்றுத் தடைக் கட்டையிலுள்ள ஓர் அழுத்து பொத்தான் மூலம் இயக்கப்படும் தொடக்க மின்னோடி மின் சுற்று வழியை முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு வகை விசை

solenoid valve : (குளி.பத.) கம்பிச் சுருள் தடுக்கிதழ் : கம்பிச் சுருள் செயற்பாடு அல்லது அழுத்தம் மூலம் அடைத்துக் கொண்டு மின்னியல் மூலம் இயங்கும் காந்த மின்கம்பிச் சுருளை உருளை வாயிலாகத் திறந்து கொள்ளும் ஒரு தடுக்கிதழ்

sole plate : (பொறி.) எந்திர அடித்தட்டு : ஓர் எந்திரத்தை வைத்து பிணைப்பதற்கான ஓர் அடித்தட்டு,