576
spark coil: (மின்.) அனற்பொறிச் சுருள்: மிகுந்த செறிவான அனற் பொறி உண்டாக்குவதற்கான மின்கம்பிச் சுருள்
spark-gap: (மின்.) மின்சுடர் இடைவெளி: மின்விசைப்பொறிதாவும் மின்முனை இடைவெளி நெறி
spark plug: (தானி.) அனற்பொறி அமைவு: உந்துபொறி, உள் வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு
அனற்பொறி அமைவு
படம்
spark plug electrodes: (தானி.) அனற்பொறி மின் வாய்கள்: மின் அனற்பொறி தாவிப் பாய்வதற்கான உலோக மின்வாய்கள்
spark test: (உலோ.) சுடர்ச் சோதனை: இரும்பையும், எஃகையும் சாணை பிடிக்கும்போது ஏற்படும் சுடரினைக் கொண்டு இரும்பு, எஃகு வகைகளைக் கண்டு பிடிக்கும் ஒரு முறை
spectral analysis: வண்ணப் படைப் பகுப்பாய்வு
spatula: தட்டலகுக் கரண்டி: வண்ணங்களைக் குழைக்கப் பயன்படும் நெகிழ்வான அலகுடைய கத்தி போன்ற கரண்டி
specification: தனிக் குறிப்பீடு: தனித்தனி விவரக் குறிப்பீடு
specific gravity: (இயற்.) ஒப்பு அடர்த்தி: ஒரு பொருளின் வீத எடைமானம். திடப்பொருள்களையும், திரவங்களையும், நீருடனும், வாயுக்களைக் காற்றுடனும் ஒப்பிட்டு அடர்த்தி கணக்கிடப்படுகிறது
specific heat: வீத வெப்பமானம்: குறிப்பிட்ட அளவை ஒரு பாகை வெப்பத்திற்கு உயர்த்துவதற்கான வெப்ப அளவை நீரொப்பீட்டெண்
specimen bar: (பொறி.) மாதிரி உலோகச் சலாகை: சோதனை எந்திரத்தில் சோதனை செய்வதற்காகத் தனியாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி உலோகச் சலாகை
spectral colours: (வண்.) வண்ணப்பட்டை வண்ணங்கள்: ஒரு கண்ணாடிப் பட்டகை மூலம் சூரிய ஒளிக்கதிர் வளையும்போது உண்டாகும் வண்ணப்பட்டை
spectro photometer: வண்ண அளவுமானி: வண்ணச் செறிவினை அளவிட்டறிய உதவும் சாதனம்
spectrogram: வண்ணப்பட்டைப் பதிவு ஒளிப்படம்
spectrograph: வண்ணப்பட்டைப் ஒளிப்பதிவுக் கருவி
spectrography: வண்ணப்பட்டைப் பதிவு ஒலிப்படப்பிடிப்பு
spectroheliograph: ஒரலைப் பதிவு ஒளிப்படக்கருவி: கதிரவன் ஒளி வண்ணப்பட்டையின் ஒரலைப் பதிவு ஒளிப்படக் கருவி
spectrohelioscope: ஒரலை நீர்க் காட்சிக்கருவி: கதிர்மண்டல ஒரலை நீளக்காட்சி
spectroscope: (வேதி.) வண்ணப்பட்டை ஆய்வுக் கருவி: வண்ணப் பட்டை அளவாய்வுக்கான கருவி. ஆவியான பொருட்கள் உண்டாக்கும் வண்ணப்பட்டை, அவற்றின் அமைப்பை ஆராய்வதற்குப் பயன்படுகின்றன
spectroscopy: வண்ணப்பட்டை ஆய்வியில்
speed indicator: (உலோ.) வேக அளவுமானி: சுழலும் எந்திரங்கள், சக்கரங்கள், சுழல் தண்டுகள் ஒரு நிமிடத்தில் சுழலும் வேகத்தைப் பதிவு செய்யும் அளவீடு கருவி