578
sphygmomanometer: (மருத்.) குருதி அழுத்தழானி: இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி
குருதி அழுத்தழானி
படம்
sphygmophone : (மருத்.) நாடி அதிர் வொலிக் கருவி : நாடி அதிர்வொலியைக் காட்டும் கருவி
sphygmus : (உட.) நாடித் துடிப்பு: இதயத்தின் துடிப்பினால் உண்டாகும் துடிப்பு
spider gears : (தானி.) சிலந்திப் பல்லிணை : சிலந்தி வலைப் பின்னல் போன்று அமைக்கப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு பல்லிணை அமைப்புகள். இதன் மூலம்: பின் இருசில் வேறுபட்ட செயல் முறைகள் பெறப்படுகின்றன
spiegeleisen : (வேதி.) கன்ம வார்ப்பிரும்பு : கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு. இதில் அதிக அளவு கார்பனும், மாங்கனீசின் அளவு 15-20 சதவீதத்திற்கு மிகைப்படும் போது அது அய மாங்கனிஸ் எனப்படும்.
spigot: (கம்மி.) மூடுகுமிழ்: ஒரு குமிழுக்குள் பொருந்தக்கூடிய ஒரு குழாய் முனை
spike: (க.க.) தடியாணி: தடித்த பெரிய ஆணி
spile : (பொறி) முளைத்தடி : நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டு மரம்
spin : (வானூ.) சுழல் இறக்கம் : விமானம் சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம்
spinal anaesthesia: (நோயி.) முதுகந்தண்டு மயக்கம் : முதுகந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் ஒரு வகை மருந்தினை ஊசி மூலம் செலுத்தி, உடலின் கீழ்ப்பகுதி உணர்வுகள் மூளையை எட்டாதவாறு தடுத்தல்
spindle: நூற்புக் கதிர்: நுனியில் கூம்பிச் செல்லும் கழிசுற்று நூற்கோல்
spinet : 16-18ஆம் நூற்றாண்டுகளிலிருந்து பயன்படுத்தப்படும் விரல் கட்டை உடைய இறகு வடிவ நரம்பிசைக் கருவி
spinneret: (குழை.) இழைபுரி : சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் நூலிழை உருவாக்கும் உறுப்பு
spinning : (எந்.) நூற்பு : பஞ்சைத் திரித்து நூலாக உருவாக்குதல்
spinning jinning : (எந்.) எந்திர நூற்புக்கருவி, பஞ்சை நூலாக நூற்கும் கருவி
spinning-machine : ( எந்.) நூற்பு எந்திரம் : நூல் நூற்கும் எந்திரம்
spinning-wheel : (எந்.) கைராட்டினம் : கையால் சுழற்றி நூல் நூற்கும் சக்கரம்
spinning latha : (உலோ.வே.) சுழல் கடைசல் எந்திரம்: உலோகத் தக்டுகளில் வேலைப்பாடுகள் செய்வதற்குப் பயன்படும் சுழலும் கடைசல் எந்திரம்.
spiral : திருகு சுருள்: திருகு சுருளாகச் செல்கிற சுருள் வட்ட வளைவு. விமானம் திருகு சுருளாகக் கீழாக இறங்குதல்
திருகு சுருள்
படம்
spiral balance : சுருள் வில்