580
பாலும் விற்கருள் விட்டமானியில் பயன்படுத்தப்படுகிறது
split phase : (எந்.) பிளவு மின்னோட்டப் படிநிலை : ஒரே மாற்று மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப்படி நிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள்
split - phase motor : (மின்.) பிளவு நிலை மின்னோடி: இது ஒர் ஒற்றை நிலை மின்னோடி. இதன் கருணைகளில் ஒன்றில் மற்றச் சுருணைகளைப் பொறுத்து மின்னோட்டம் பாயுமாறு செய்வதன் மூலம் தானே இயக்குவிக்குமாறு செய்யப்படுகிறது
split gear : (எந்.) பிளவுப் பற்சக்கரம் : இருபிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம்
split pulley: (எந்.) பிளவுக் கம்பி: இரு பாதிகளாக அமைக்கப்பட்டு மரையாணியால் பிணைக்கப்பட்டுள்ள கப்பி
split ring: (எந்.) பிளவு வளையம்: ஒர் உந்து தண்டிலுள்ள பலகூற்று வளையம்
split wheel: பிளவுச் சக்கரம்: இரு பிளவாகச் செய்யப்பட்ட சக்கரம்
spoke: (எந்.) ஆரை: சக்கரத்தின் குருக்குக்கை குடத்துடன் வெளி விளிம்பை இணைக்கும் கரம்
spoke shavs: (மர.) இருபிடி இழைப்புளி: இருபிடியுள்ள வளைதள இழைப்புளி. முனைகளை வடிவப்பதற்கும் வழவழப்பாக்குவதற்கும் இது பயன்படுகிறது
spoking machine : சாய்வு எந்திரம்: பளுக்களுக்கு ஒத்த சாய்வு வழங்க உதவும் எந்திரம்
sponge lead : (மின்.) கடற்பஞ்சு ஈயம் : கடற்பஞ்சு போன்று துளையுடைய ஈயம். இது சேம மின்கலத்தில் எதிர்மின் முனைத் தகடுகளாகப் பயன்படுத்தப்படுகிறது
sponginess : கடற்பஞ்சு பண்பு: கடற்பஞ்சினை ஒத்த பண்பு; உலோகங்களின் செறிவற்ற தன்மை; உறிஞ்சும் இயல்பு
sponginess : (வார்.) நிரை உள்துளை உடைமை : உலோகங்களின் செறிவற்ற தன்மை
sponson : (வானூ.) புற உந்து தளம்: கப்பலில் தளத்தின் புறத்தே உந்தும் பகுதி
spontaneous combustion : தன்னக உள்ளெரிதல் : தன்னிடத்திலேயே எழும் வெப்பத்தினால் தீப்பற்றி கொள்ளும் இயல்பு
spoon bit : கரண்டித் தமருசி: கூர்மையான முனைகளுடன் பிறை வடிவத்திலுள்ள துளையிடுவதற்கான தமருசி. இது காகிதம். அட்டைகள் போன்றவற்றில் துளையிடுவதற்குப் பயன்படுகிறது
sport road-stet : (தானி.) பந்தய ஊர்தி : இது சாதாரண உந்து ஊர்தி ன்றது. இதன் பின் புறத் தள அடுக்கு மட்டும் சாமான்கள் வைப்பதற்கான இடமாக இல்லாமல், பின் இருக்கையாக அமைந்திருக்கும்
spot : ஒளிப்புள்ளி : தொலைக் காட்சியில் ஒளிக் கற்றையானது இடமிருந்து வலமாக ஒரு கோட்டினை அல்லது உருக்காட்சியை அலகிடும்போது, எதிர்மின் கதிர் படக் குழாயின் ஒளியுமிழ் திரையின் மீது எலெக்ட்ரான் கற்றையினால் உண்டாக்கப்படும்
spotting tool : (எந்.) குறிகாட் டுக்கருவி : இதனை மையங்காட்டும் மற்றும் முகப்புக் காட்டும்