பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
581

கருவி என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது

spout : (வார்.) கொண்டிவாய்க் குழாய்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து கட்டுவதற்கு திரவ உலோகம் பாய்வதற்கான கொண்டி வாய்க்குழாய்

spraying liquid: (தானி.) தெளிப்புத் திரவம்: எண்ணெய்கள், துப்புரவுத் திரவங்கள், வண்ணங்கள் உட்பட மெருகேற்றுவதற்குப் பயன்படும் திரவப் பொருட்கள்

sprig : (மர.வே.) எடைக் கருவி: திருத்தப்பட்டவிறைப்பு விற்கருள். ஒரு கூட்டில் அடைக்கப்பட்டுள்ள ஓர் எடை பார்க்கும் கருவி. இதில் அளவு குறிக்கப்பட்ட அளவு லில்கோ ஒரு முள் எடையைக் காட்டும்

spring balance: வில்தராசு : வில் விசையின் மூலம் எடைகாட்டும் தராசு. இதில் உறையினுள் விற்சுருள் வைக்கப்பட்டிருக்கும். உறையின் மேற்பரப்பில் எடையளவு குறிக்கப்பட்டிருக்கும். விற்கருளின் கீழ் முனையிலுள்ள கொக்கியில் எடை பார்க்க வேண்டிய பொருளை மாட்டித் தராசைத் தூக்கினால், விற்கருளோடு இணைந்துள்ள முள் நகர்ந்து எடையளவைக் காட்டும்

வில் தராசு(படம்)

spring chuck or spring collet : (எந்.) விற்கருள் கவ்வி : திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் பொருத்தி அழுத்தி மூடப்படும். அழுத்தம் தளர்த்தப்படும்போது விற்சுருள் போதிய அளவு விரிந்து பொருள் விடுவிக்கப்படுகிறது

spring clip : (தானி.) விற்சுருள் பற்றுக் கருவி: விற்சுருளை இருசுடன் இணைப்பதற்குப் பயன் படும் U-வடிவ மரையாணி. இருசுடன் விற்சுருளை இணைப்பதற்கு இரு பற்றுக் கருவிகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு விற்கருளையும் பொருத்துவதற்கு இருபற்று கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன

விற்கருள் பற்றுக் கருவி(படம்)

springer : (க.க.) கவான் அடிக்கல்: மஞ்சடைப்பு மேல்முகட்டின் அடிக்கல்

spring hangers : (தானி.) விற்சுருள் கொக்கி : உந்து ஊர்தியின் சட்டத்தில் விற்கூருள்கள் இணைககப்படுவதற்குப் பொருத்தப்பட்டுள்ள கொக்கி

spring hinge : (க.க.) விற்சுருள் கீல் : உள்ளே ஒரு விற்சுருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவுகளைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

spring leaf : (எந்.) விற்சுருள் அலகு: உந்து ஊர்திகளில் பயன்படும் விற்சுருளின் தட்டை அலகு

sprinkler system (தானி.). விற்சுருள் இருசு : விற்சுருள்கள் பொருத்தப்படும் இருசுகளின் தட்டையான மேற்பரப்புகளில் ஒன்று

sprinkler system : ( க.க.) தெளிப்புக் குழாய் : தீப்பிடிக்கும் போது தானாகவே நீரைத் தெளிக்கும் தெளிப்பு முனைகளுடைய குழாய் அமைப்பு