பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
585

standard time : (உலோ) செந்திற நேரம் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரு சராசரித் தொழிலாளிக்குத் தேவைப்படும் நேரம்

standing wave : (மின்.) நிலைப்பு அலை : ஒரு புள்ளியிலுள்ள உடனடி மதிப்பளவுக்கும் இன்னொரு புள்ளியிலுள்ள மதிப்பளவுக்கு மிடையிலான விகிதமானது நேரத்துடன் மாறாதிருக்கிற ஓர் அலை. மின்வழி முடிவுறு வதிலிருந்து ஏற்படும் பிரதிபலிப்புகளின் விளைவாகச் செலுத்து மின்வழியில் உண்டாகும் அலைகள்

stanniferous : வெள்ளீயம் அடங்கிய பொருள்.

staphylococus : (நோ.) வட்ட பாக்டீரியா : காயங்களிலும் கழலைகளிலும் நோய்த் தொற்று உண்டாக்கும் வட்டவடிவ பாக்டீரியாக் குழுமங்கள்

staple : தைப்பு முள் : மரத்தினுள் செலுத்துவதற்கான கூர்மையான நுனிகளுடைய U-வடிவக் கம்பி அல்லது இரும்புத் துண்டு

star connection : (மின்.) மும்முனை இணைப்பு : மூன்று நிலை மின்னாக்கி களிலும், மின் மாற்றிகளிலும் மூன்று சுருள்கள் உண்டு. இவை முக்கிளை, Y, டெல்ட்டா எனப்படும். ஒவ்வொரு சுருளின் ஒரு முனையானது ஒன்றாக இணைக்கப்பட்டு மற்ற மூன்று முனைகளும் தனித்தனியாகப் பிரிக் கப்படும் போது அது முக்கிளை இணைப்பு அல்லது Y-இணைப்பு எனப்படும்

star drill: முக்கிளைத் துரப்பணம்: கல்லில் அல்லது கட்டுமானத்தில் துரப்பணம் செய்வதற்குப் பயன்படும் நட்சத்திர வடிவ முனை கொண்ட ஒரு கருவி

'starling : (க.க) திண்டு வரி: காலத்தின் திண்டைச் சுற்றிந் பாதுகாப்பிற்காக இடும் பெரும் தூண் தொகுதி

starter: (தானி;மின்.) தொடக்கி: எந்திர இயக்கத்தைத் தொடங்கி வைக்கிற அமைவு

starting box : (மின்) முருக்கு பெட்டி: தடையினை ஒன்றன் பின் ஒன்றாகத் துண்டித்து விட்டு, மின்னோட்டத்தைப் படிப்படியாக வழங்கு வதற்கு ஒரு விசைக்கரமும் தொடுமுனைகளும் அடங்கிய ஒரு தடை மாற்றி

starting circuit : (தானி.) தொடக்க மின்சுற்று வழி: தொடக்க விசையை நிறுத்தியவுடன் நேர்மின் முனையிலிருந்து மின்விசைக்கும் தொடக்க மின்னோடிக் களச் சுருணைக்கும். மின்னகத்திற்கும் மின்தொடு விசைக்கும் பாய்கிறது. அது பின்னர் மின்கலத்தின் எதிர் மின்முனைக்கு வருகிறது

starting motor : (தானி.) தொடக்க மின்னோடி : மின்சுற்று வழியை மூடுவதன் மூலம் எஞ்சினைத் திருப்புவதற்குப் பயன்படும் மின்னோடி

starting newel : (க.க.) தொடக்க நடுத் தூண் : படிக்கட்டின் அடியில் கைப்பிடிச் சுவரைத் தாங்கி நிற்கும் தூண்

starting torque : (மின்.) தொடக்கு திருக்கை : மின்னோட்டத்தின் தொடக்க நிலையில் ஏற்படும் மின்காந்த விளைவின் மூல மாகத் தனது சுழல் தண்டின் மீது ஒரு மின்னோடி உண்டாக்கும் திருப்பு விளைவு

startix : (தானி.) மின்கம்பிச் சுருள் உருளை: சுடர் மூட்ட விசையைப் போட்டதும் தொடக்க மின்னோடி விசையைக் தானாகவே