பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

586

மூடிவிடும் மின் கம்பிச் சுருள் உருளை

static ataxia ; தடுமாறு நிலை : விழாமலோ தடுமாறாமலோ நிற்கமுடியாத நிலை

static balance : நிலைச் சமநிலை: ஒரு கப்பித் தொகுதியின் அல்லது சுழல் தண்டின் எடையானது சமச் சீராகப் பரப்பப்பட்டிருக்கும் போது உள்ள சமநிலை

static balanced : (வானுர.) நிலைச் சமநிலைப் பரப்பு: பொருண்மையின் மையமானது நீல் அச்சில் அமைந்துள்ள கட்டுப்பாட்டுப் பரப்பு

star tracker : (விண்) விண்மீன் நோக்கி : ஒரு விண்மீனின் செல்வழியைக் கூர்ந்து நோக்கி வருவதற்கு ஒரு ஏவுகணையில் அல்லது வேறு பறக்கும் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தொலை நோக்கிக் கருவி. இது ஒளிசார்ந்த தாகவோ அனல் வீச்சு சார்ந்ததாகவோ இருக்கலாம்

static ceiling : (வானூ) நிலை முகடு : திட்ட அளவு வாயு மண்டலத்தில் அகற்றக்கூடிய எடைகள் அனைத்தையும் அகற்றிய பிறகு வான்கலம் நிலைச் சமநிலையில் இருக்கும் உயரம்

static characteristics : (மின்) நிலையியல் பண்புகள்: ஒரு நிலையான தகட்டு மின்னழுத்தங் கொண்ட ஒரு குழலின் பண் பியல்புகள்

static charge : (மின்) நிலையியல் மின்னேற்றம்: ஒரு பொருளின் மீது எதிர்மின் சார்ந்ததாக அல்லது நேர்மின் சார்ந்ததாக உள்ள மின்னேற்றம்

static electricity ; நிலையியல் மின்னாற்றல்: இயக்காத நிலையிலுள்ள மின்னாற்றல். இது ஓட்ட மின்னாற்றலிலிருந்து வேறுபட்டது. இது உராய்வுத்தொடர்பு மூலம் உண்டாக்கப்படுகிறது. பட்டுத் துணியில் அல்லது கம்பளித் துணியில் ஒரு கண்ணாடிக் கோலைத் தேய்ப்பதால் உண்டாகும் மின்னாற்றல் இதற்குச் சான்று

static friction : நிலையியல் உராய்வு : இரு பொருட்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் போக்கில் ஆனால் உண்மையில் விலகிச் செல்லாதிருக்கிற நிலையில் அவற்றுக்கிடையி லுள்ள உராய்வு

static load : நிலையியல் சுமை: அசையா நிலையிலுள்ள சுமை அல்லது எடை

statical electricity : நிலையியல் மின்னாற்றல்

statical pressure : நிலையியல் அழுத்தம்

statics : நிலையியல் : இயங்கா நிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருட்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி

static stability : நிலையியல் உறுதிப்பாடு: விமானம் தனது வழக்கமான உயரத்தில் அச்சிலிருந்து தமது ஈர்ப்புமையத்தின் மூலம் சற்றே சாய்ந்திடும்போது, அது முதலிலிருந்த உயரத்திற்குத் திரும்பி வருவதற் குரிய உறுதிப்பாட்டு நிலை

static testing : (விண்) நிலையியல் சோதனை : ஒரு சாதனத்தின் இயக்க நிலை வினைகளைச் சோதனை செய்து கணிப்பதற்காக அதனைச் செயலற்ற நிலையில் சோதனை செய்தல்