பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57

asafoetida: (மருந்.) பெருங்காயம்: சதகுப்பைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடியிலிருந்து கிடைக்கும் பிசின். இது மிகவும் காரமணம் கொண்டது. இது நரம்புக் கோளாறுகளுக்கான மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது

asbestine : (வண்.) கல்கார் இயல்புடைய :வர்ணங்கள் தயாரிப்பதில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை மக்னீசியம் சிலிக்கேட்டு கரைசலில் வண்ண நிறமியை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளவும், வண்ணப் படலங்களைக் கட்டுறுத்தி வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. "ஃபிரெஞ்சுச் சுண்ணம்" 'டால்க்' என்ற பெயர்களிலும் இது விற்பனையாகிறது

asbestos : கல்நார் : இழை வகையைச் சேர்ந்த தகட்டியல் கணிப்பொருள் வகை. இது மிக அதிக வெப்பத்தையும் தாங்கக் கூடியது. அதனால் தீக்கிரையாகாதது. அமிலங்களாலும் இது பாதிக்கப்படுவதில்லை. இதனைக் கொண்டு தீக்கிரையாகாத ஆடைகள் தயாரிக்கிறார்கள். வாணிக முறையில் கிடைக்கும் கல்நாரில் பெரும்பகுதி கனடா நாட்டிலிருந்து கிடைக்கிறது. தீப்பிடிக்காத ஆடைகள், நாடக அரங்குகளின் திரைகள், கட்டுமானப் பொருள்கள், தடைகள் உள்வரிப் பூச்சு முதலியவற்றுக்கு இது பயன்படுகிறது

asbestos shingles : (க.க.) கல்நார் மரப்பாவோடு : மரப்பாவோடுகளின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தீப்பிடிக்காத கூரை ஒடு. இதில் கல்நார் முதன்மையான பகுதியாக அமைந்திருக்கும்

ascaris : (உட.) சிறுகுடற்புழு: குடலிலுள்ள வளையப் புழுக்கள் போன்ற புழுக்கள்

ascender : (அச்சு) ஏறுமுகம் :அச்சுத் துறையில் ஆங்கில நெடுங் கணக்கில் b,d,h போன்ற சிற்றெழுத்து வடிவங்களில் எழுத்தின் உடற்பகுதியிலிருந்து மேல்நோக்கி நீண்டிருக்கும் எழுத்தின் பகுதி

ash : சாம்பல் (1) நிலக்கரியிலுள்ள எரியத்தக்க தாதுப்பொருள்களில் எரிந்தவைப் போக எஞ்சியிருக்கும் பகுதி. இது நிலக்கரியிலுள்ள கரிம்ப் பொருளாகும். இதற்கு வெப்ப ஆற்றல் எதுவுமில்லை

(2) அசோக மரம்: (fraxinus) தேவதாரு இனத்தைச் சார்ந்த கட்டுமானத்திற்குச் சிறந்த மர வகை இது. இளவண்ணமுடையது. சொர சொரப்பானது. சக்கரங்களின் ஆரைக் கால்களுக்கும் குடங்களுக்கும், சம்மட்டிக் கைபிடி களுக்கும், பொதுவாக நெகிழ்திறனும் வலிமையும் வாய்ந்த மரப்பொருள்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

ashing : (குழை.) மெருகேற்றல்: இது மெருகேற்றுவதற்கான ஒரு முறை. ஒரு சொரசொரப்பான உராய்வுப் பொருள் பூசிய மெருகேற்றும் சக்கரத்தின் உதவியால் இது செய்யப்படுகிறது

ashlar : (தச்சு.) மேவுகல் : செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக் கல்

aspect ratio: பார்க்கும் கோணவிகிதம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் நடுநிலை நாண் வரையில் இடையகல அளவின் விகிதம் . அதாவது விமானத்தின் காற்றழுத்தத்தளத்தின் மொத்தப் பரப்பளவில், பெரும் இடையகல அளவின் வர்க்கத்தின் விகிதம்