பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

590

step down transformer: (மின்) குறைப்பு மின்மாற்றி: மின்வழி மின்னாட்ட அளவை அல்லது மின்னழுத்த அளவைக் குறைந்த அளவுக்கு மாற்றுகிற மின்மாற்றி

stepping round: (எந்) வளை வரைப் பகுப்பு: வில், வளைகோடு அல்லது வட்டத்தைக் கவராயத்தின் மூலம் பல பகுதிகளாகப் பகுக்கும் முறை. பல்லிணைச் சக்கரத்தை உருவாக்குவதில் இந்த முறை பயன்படுகிறது

step up: (மின்) ஏறுமுக மின்னழுத்தம்: ஓர் ஏறுமுக மின்மாற்றியில் உள்ளது போன்று ஓர் உயர் மின்னழுத்த்த்திற்கு அதிகரித்தல்

stereo chemistry: (வேதி.) சேணிலை வேதியியல்: விண்வெளியில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பட்ட பொருளியைபு நிலை பற்றி ஆராயும் வேதியியல் பிரிவு

stereography: திட்பக் காட்சி அமைவு முறை

stereoscope: திட்ப காட்சிக்கு அமைவு முறை: இரு கண்ணாலும் இரு கோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக் காட்சி தோற்றுவிக்கும் கருவி

stereophonic: பலதிசைத் தொனி: ஒலி வகையில் பல திசைகளிலிருந்து வருவது போலமைந்த தொனியமைப்பு முறை. இந்த முறையில் உண்டாகும் தொனியில் ஆழமும், அழுத்தமும், செழுமையும் ஏற்படுகிறது

stereopsis: இருவழி இயை கோணக்காட்சி: இருவிழி இரு கோண நிலைப்படக் காட்சியமைவு முறை

stereo type: (அச்சு.) பாள அச்சு அட்டைத் தகடு: உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு

stereotyping: (அச்சு) பாள அச்சுப் பதிவுமுறை: பாள அச்சு முறையில் அச்சடித்தல். இதில் வெப்பமுறை பொதுவாகப் பெருமளவில் பயன்படுகிறது

sterlings : ஸ்டர்லிங் வெள்ளி: வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஓர் அளவுத்திட்டமுறை. 925/1000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75|1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியாகும். அணிகலனின் 'ஸ்டெர்லிங்' என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாதமாகும்

stet (அச்சு.) மூலப்படி விடுக: அச்சுப் பணியில் பிழை திருத்துவோர் பயன்படுத்தும் சொல். அச்சுப்படியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அடித்ததை அடியா நிலையில் 'முன்போல் நிற்க' 'விட்டு விடுக' என்று பொருள்படும்

stethoscope: (மருத்) இதயத் துடிப்பு மானி: இதயத்துடிப்பு போன்ற உடலினுள் எழும் ஓசைகளைக் கேட்டறிய உதவும் கருவி

இதயத் துடிப்பு மானி: படம்

stick: (அச்சு.) அச்சுக்கோப்புக் கட்டை: அச்சுக் கோப்பவர்கள் அச்சு எழுத்துகளைக் கோத்து அடுக்குவதற்குப் பயன்படும் சிறிய கைச்சட்டகம்

stickful: (அச்சு.) அச்சுக்கோப்புக் கட்டைநிறைவு அளவு: அச்சு எழுத்