பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
601

வெண்ணுக்குக் கூடுதலாக அல்லது குறைவாக அலைவெண் மாறுபடும். இதனை ஒர் அலைவுப் பதிப்பானுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒர் ஒருங்கியைபு மின்சுற்றுவழிகளின் மாறுதல் போக்குகளைக் கண்காணிக்க முடியும்

sweep oscillator: (மின்.) வீச்சு ஊசல்: ஒர் எதிர்மின் முனைக் குழலில் எலெக்ட்ரான் கற்றையை விலக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் ஊசல்

sweet gum: (மர.) இனிப்புக் கோந்து: குங்கிலியப் பிசின். இதனைச் செம்மெழுகு என்றும் கூறுவர். மலைகளில் வளரும் ஒரு வகை மரத்தின் பிசினிலிருந்து இது கிடைக்கிறது

sweet oil: (வேதி.) ஒலிவ நெய்: குறைந்த தரமுடைய, கெட்டியான ஒலிவ நெய். இது மருந்துப் பொருளாகவும், சமையலுக்காகவும் மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது

sweet or red gum: (மர.வே.) செம்மெழுகு மரம்: செம்மெழுகு தரும், மலையில் வளரும் மரம். இது பெரிதாக வளரும். இது மென்மையானது; எனினும் வலுவானது. இது அழகான வடிவம் பெறும்; எனினும் உருத்திரிந்து வளரும்

swell: (வார்.) புடைப்புரு: வார்ப் படத்தைப் போதிய அளவு அழுத்தம் கொடுக்காததால் ஏற்படும் புடைப்பு

swing saw: (மர.வே.) ஊசல் ரம்பம்: மேலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கீலுள்ள சட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள வட்ட வடிவ ரம்பம். வேலைப்பாடு வேண்டிய பொருள் நிலையாக இருக்க, ரம்பத்தை அங்குமிங்கும் அசைத்து இயக்கி அறுப்பு வேலை செய்யப்படுகிறது

swinging choke: (மின்.) அலையாட்டத் தூண்டுசுருள்: இது ஒரு வகைத் தூண்டு சுருள். இதில் கம்பிச் சுருளின் வழியே செல்லும் சராசரி மின்னோட்டத்திற்கேற்பத் தூண்டலும், தூண்டமும் மாறுபடுகிறது

switch : (மின்.) மின் விசை: மின் சுற்றுவழியை இணைக்கவும் முறிக்கவும் பயன்படும் சாதனம்

switch board: (மின்.) மின்விசைப் பலகை: பல மின் தொடர்பு இணைப்புகள் கொண்ட பலகை. பதில் மின்மானியும் பொருத்தப்பட்டிருக்கும்

switch box: (மின்.) மின்விசைப் பெட்டி: மின்விசை அமைப்பினைப் பாதுகாக்கவும், மின்னோட்டம் செல்லும் உறுப்புகள் ஒன்றையொன்று தொட்டு விடாமல் தடுக்கவும் பயன்படும் இரும்புப் பெட்டி

switch rotary: (மின்.) விசைச் சுழலி: சுழல்வினை மூலம் இயக்கப் படும் ஒரு விசை. பல சமயங்களில் பல விசைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டு ஒற்றைத் சுழல் தண்டு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது

swivel: (எந்.) சுழல் திருகு: ஒன்றின் மீது ஒன்று சுழலும்படி அமைந்த திருகு அமைப்பு

swivel joint: (கம்மி.) சுழல் மூட்டு: ஒன்றன் மீது ஒன்று சுழலும் படி அமைந்த பொருத்து

swivel vise: (பட்.) சுழல் குறடு: இது ஒரு மேசைக் குறடு. இது தான் பற்றியிருக்கும் பொருளைத் தேவை

swivel vise: (பட்.) சுழல் குறடு: படம்