பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

602

யான நிலைக்குக் கொண்டு வரும்

S_wrench: (எந்.) S-திருகுக்குறடு: S என்ற ஆங்கில எழுத்தின் வடிவிலுள்ள திருகுக்குறடு இது நிலையானதாக அல்லது தக்கவாறு அமைத்துக் கொள்ளத் தக்கதாக அமைந்திருக்கும்

sycamore : (மர.வே.) அத்தி மரம்: 46.மீ. உயரம் வளரக்கூடிய மிகப் பெரிய மரம். மிதமான அளவு கனமுடையது; இதனைப் பிளப்பது மிகக் கடினம், ஒரு கன அடியின் எடை சுமார் 8 கி.கி. இருக்கும். அழகான வரிகளுடையது, இளம் பழுப்பு நிறமுடையது. அறை கலன்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. விமானங்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது

symbol: சின்னம்: சுருக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படும் அடையாளக் குறியீடு

symbol : (மின்.) குறியீடு: ஒர் அலகினை அல்லது உறுப்பினைக் குறித்துக்காட்டும் எழுத்து அல்லது உறுப்பினைக் குறித்துக் காட்டும் எழுத்து அல்லது குழுஉக் குறி. எடுத்துக்காட்டு: 'X' என்ற எழுத்து எதிர்வினைப்பைக் குறிக்கிறது

symmetrical: செவ்வொழுங்கு: உறுப்புகள் இருபுடை ஒத்திசைவாக அமைந்திருத்தல்

sympathetic nervous system : (உட.) பரிவு நரம்பு மண்டலம் : முதுகந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டுப் பரவலாக அமைந்திருக்கும் பழுப்பு நிற நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது இந்த நரம்பு மண்டலத்தின் முக்கிய பணி. எடுத்துக்காட்டாக, அபாயம் நேரிடும்போதும் மனக்கிளர்ச்சி ஏற்படும் போதும் செயற்படத் தூண்டுவது இந்த நரம்பு மண்டலமேயாகும். தானியங்கும் நரம்பு மண்டலத்தின் இன்னொரு பகுதி துணைப்பரிவு நரம்பு மண்டலமாகும். உடலினைப் பேணி வருவதற்கும், அதன் எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இது உதவுகிறது

sympathetic pain : (நோயி .) பரிவு நோவு: தொடர்புணர்ச்சியால் ஏற்படும் நோவு

sympathetic resonance: (இயற்.) பரிவு ஒலியதிர்வு : வாயு நிலைத் தொடர்புறவு காரணமாக ஏற்படும் ஒலியதிர்வு

sympathetic sound : (இயற்.) பரிவு ஒலி : வாயு நிலைத் தொடர்புறவு காரணமாக உண்டாகும் ஒலி

symphysis : கூட்டினை வளர்ச்சி: இயற்பண்பு இதழ்களை ஒன்றாக ஒருங்கிணைத்து வ்ளர்த்தல். எடுத்துக் காட்டு : இளமஞ்சள் உருளைக் கிழங்கு

symphysis : (உட.) கூட்டுக்கனு: எலும்புகளை உடலின் மையக் கோட்டில் ஒன்றாக இணைத்தல்

sympiesometer: (இயற்.) அழுத்த வளியிணைவுப் பாரமானி : நீர்மத்துடன் இணைவாக அழுத்தமிக்க வாயுவும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வாயுமண்டல அழுத்த மானி

symptom : (நோயி ) நோய்க்குறி: நோயினை உணர்த்தும் அறிகுறிகள். நோயாளி தானே