603
உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்ப நிலை, நாடித் துடிப்பு போன்றவை மருத்துவர் கருவிகள் மூலம் கண்டறியும் நோய்க் குறிகள்
symptomatology (sympto matics) : (நோயி.) நோய்க் குறியியல் : நோய்க்குறிகள் பற்றி ஆராயும் அறிவியல்
synaesthesia: பிறிது நுகர்வுணர்வு: நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் ஒருவகைக் கோளாறு
synchro: (மின்.) இணக்கமாற்றுப் பொறி : ஒரு சுழல் தண்டின் சாய்வு நிலையை எந்திரப் பிணைப்பு ஏதுவுமின்றி ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு மின்னியல் எந்திர சாதனம்
synchrotron: (மின்.) மின்விசைப் பெருக்கி : மின்ம விசைப் பெருக்க மூட்டப் பயன்படும் மின்காந்த விசை இணையமைவு
synchro-mesh : (தானி.) உந்து விசை மாற்றமைவு : உந்து ஊர்திகளில் விசை மாற்றுப் பற்சக்கர இடை உராய்வு அமைவு
synchronous motor : (மின்.) இணக்க மின்னோடி: மின் வழங்கும் மின்னோடியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் தனது வேகத்தை நிலையாகக் கொண்டிருக்கிற ஒரு மின்னோடி
synchronous vibrator : (மின்.) இணக்க அதிர்வி : ஒரு விசை எடுப்பு மின் சுற்றுவழியில் மின் சுமைவழியே ஒரே திசையில் மின்னோட்டம் பராமரிக்கப்படும் வகையில் கூடுதல் தொடுமுனைகளைக் கொண்டுள்ள ஓர் அதிர்வி
synchronization : ஒருங்கிசைவுறுத்தல் : தொலைக்காட்சியிலும் திரைப்படக் காட்சியிலும் ஒளியும் ஒலியும் ஒன்றி ஒருங்கிசைந்து இயங்கும்படி செய்தல்
synchroreceiver: (மின்.) இணக்க அலைவாங்கி : இது இணக்க மின் செலுத்தியைப் போன்றது. ஆனால், இது சமிக்ஞைகளை எந்திர இயக்கமாக மாற்றுகிறது
synchroscope : (மின்.) இணக்கங் காட்டி :' விளக்குகளின் மூலமாக இணக்குவிப்பதை அறுதியிடும் ஒரு கருவி. இணக்கச் சமிஞை வந்தால் மட்டுமே உண்டாகக் கூடிய மிகக்குறுகிய கால வீச்சினைக் கொண்ட ஓர் அலைப்புக் கருவி
synchro transmitter : (மின்.) இணக்க மின் செலுத்தி : ஒரு சுழலும் மின் கலத்தைக் கொண்ட ஒரு மின்மாற்றி. இது எந்திர உட்பாட்டினை மின்னியல் சமிக்ஞைகளாக மாற்றி அந்தச் சமிக்ஞைகளை அலை வாங்கிக்கு அனுப்புகிறது
synchrotron : மின்காந்த இணையமைவு : மின்மவிசைப் பெருக்க மூட்டப் பயன்படும் மின்காந்த விசை இணையமைவு
synchronous motor : (மின்.) இணக்க மின்னோடி : மின் வழங்கும் மின்னாக்கியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் வேகம் நிலையிர்க் இருக்கும் மின்னோடி
syncline : (மண்.) மை வரை மடிவுப் படுகை : பாறை கீழ்முகமாக மடிந்திருத்தல்
sync pulse : (மின்.) இணக்கத் துடிப்பு : ஒர் ஊசலியை அல்லது மின்சுற்று வழியை இயங்கத் தூண்டும் இணக்கத் துடிப்பு
sync separator : (மின்.) இணக்கப் பிரிப்பான் : தொலைக்காட்சி