பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

604

சமிக்ஞையில் படத் தகவலிலிருந்து இணக்கத் துடிப்புகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் ஒரு குழல்

syndrome : (நோயி.) நோய்க் குறித்தொகுதி : ஒரு நோயைக் காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகுந்த உடல் ப்பம், தொண்டை வீக்கம், மெதுவான நாடித்துடிப்பு, அடிக்கடி ஏற்படும் மயக்கம் ஆகியவை இதயத்தின் மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலான தடுக்கிதழ் அடைப்பட்டிருப்பதைக் குறிக்கிறது

synthesis: செயற்கைப் பொருளாக்கம் : தனிமங்களிலிருந்து அல்லது தனிக்கூட்டுப் பொருட்களிலிருந்து ஒரு செயற்கைச் சேர்மப் பொருளை ஆக்குதல்

synthetic : (குழைம.) செயற்கைப் பொருள் : தனிமங்களிலிருந்து அல்லது எளிய கூட்டுப் பொருள்களிலிருந்து செயற்கையாகச் செய்யப்பட்ட வேதியியல் கூட்டுப் பொருள்

synthetic resin : (குழை.) செயற்கைப் பிசின்: வேதியியல் வினைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு குழைமக் (பிளாஸ்டிக்) கூட்டுப்பொருள். இது இயற்கைப் பிசின்களைப் போன்று இருப்பினும் வேதியியல் அமைப்பிலும் எதிர் வினைகளிலும் பெரிதும் வேறுபட்டிருக்கும்

syphilis : (நோயி.) கிரந்தி/மேகப்புண் : திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு முலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும், பெண்ணிலிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற்பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின் னர் இரத்த நாளங்கள், இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற் றையும் தாக்குகிறது. இது குழந்தைகளையும் பீடிக்கிறது

syringe : பீற்று மருந்தூசி : உடலில் விசைப் பீற்று மருந்து குத்திச் செலுத்துவதற்கான குழல் ஊசி.

system : (தானி.) கருவித்தொகுதி: ஒரே ஆக்கப்பண்புகளுடன் ஒருங்கிணைந்து இயங்கும் கருவிகளின் முழு மொத்தத் தொகுதி

systems engineering : (தானி.) கருவித் தொகுதிப் பொறியியல் : கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகளை வடிவமைக்கும் பொறியியல்