பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
607

tail unit: (வானூ) வால் தொகுதி: விமானத்தை நிலைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவ விமானத்தின் பின்புறத்தில் அமைந்த எல்லா பரப்புகளும் அதாவது நிலைப்படுத்தி, துடுப்பு, சுக்கான் தூக்கி, ஆகியவை அடங்கும்

tail wheel: (வானூ.) வால் சக்கரம்: தரையில் உள்ளபோது ஒரு விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கும் சக்கரம். அது திருப்பத்தக்கதாக அல்லது திருப்ப முடியாததாக, நிலையாக அல்லது சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம்

tain: வெண் மெல் தகடு: முகக் கண்ணாடியின் முகட்டுக் காப்புத் தகரம்

take: (அச்சு.) எழுத்துப் பகுதி: அச்சுக்தோப்பவர் எந்த ஒரு சமயத்திலும் வைத்திருக்கின்ற ஒரு வாசகத்தின் ஒரு பகுதி

take-off distance: (வானூ.) எழும்பு தொலைவு சுழி: நிலை வேகத்திலிருந்து கிளம்புகிற ஒரு விமானம், இறுதியாகத் தரையி லிருந்து அல்லது நீரிலிருந்து தொடர்பகன்று மேலே எழும்புவது வரையிலான தொலைவு. மேலெழும்பும் தொலைவு, காற்றமைதி அல்லது குறிப்பிட்ட காற்று வேக அடிப்படையில் கணக்கிடப்படுவது

take-off speed (வானூ) எழும்பு வேகம்: ஒரு விமானம் முற்றிலுமாக வானில் எழும்பிய நிலையில் உள்ள காற்று வேகம்

take-up.: (பட்.) இறுக்கமைவு: தேய்மானத்தால் அல்லது வேறு காரணங்களால் பகுதிகளில் ஏற்பட்ட தவிர்வைப் போக்குவதற்கான ஒரு கருவி

taking பp; (பட்.) சரிப்படுத்து: எந்திரம் போன்றவற்றில் தேய்மானத்துக்காகத் தகுந்தபடி பொருத்துதல் சம்பந்தப்பட்ட்து

talc: சவர்க்காரக்கல்: காகிதம், மசகுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாக்கல்

talc. (வன்) வண்ணச் சுண்ணம்: வண்ணங்களில் நிமிர்த்து பொருளாகப் பயன்படுத்தப்படும் நீரடங்கிய மக்னீசியம் அலுமினியம் சிலிக்கேட்

talo: வெளிமக் கன்மகி; மென் கல் பொடி:காகிதம், உய்வுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிற மென்கல்பொடி

tallow: கொழுப்பு விலங்கின் உருக்கிய நிணம்: விலங்குக்கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படுவது

tambour; ( க.க. ) கூரையிட்ட பாதை: கூரையுள்ள சிறிய மூடப் பட்ட நடைபாதை

tamo, japanese ash: (மர. வே.): ஜப்பானி தாமோ சாம்பல்: தாமோ, ஜப்பானில் சாம்பல் (மரவேலை) ஃபிராக்சிமஸ் மஞ்சூரியா. இப் பொருளானது, நிறத்திலும் தன்மையிலும் பெரும் வித்தியாசம் கொண்டது. இருக்கைச் சாதனங்கள், அறைத் தடுப்பு, அழகுச் சுவர் போன்று பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிறையப் பயன் படுத்தப்படுகிறது. தாமோ நேர்த்திப் பூச்சு மூலம் மரத்தின் கீற்றுப் பாணிகள் மிக எடுப்பாகத் தெரியும்

tamp; கெட்டித்தல்: வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச் சுரங்க வாயில் களிமண் திணித்து வைத்தல்