பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59

களிடமிருந்து விலைக்கு வாங்கி, ஒரு தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட உந்து

assembling: ஒன்றிணைத்தல்: ஓர் எந்திரவியலில் அடங்கிய உறுப்புகளை அந்தந்த இடத்தில் சரியாகப் பொருத்தி ஒன்றிணைத்தல்

assembly line: ஒருங்கிணைப்புப் பிரிவு: பகுதி பகுதியாக உறுப்புகளைத் தயாரித்துப் பின்னர் ஒருங்கிணைத்து உந்துகளைத் தயாரிக்கும் முறை முதன்முதலில் உந்து தயாரிப்புத் தொழிலில் புகுத்தப்பட்டது. இன்று இந்த முறை ஏராளமான தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்தப் பிரிவு இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும். அது இயங்கும் போதே தொழிலாளர்கள் உறுப்புகளை இணைத்து விடுவார்கள்

assets: சொத்துடைமை: கடன்கள் முதலியவற்றை அடைப்பதற்குக் கிடைப்பனவாகவுள்ள பணத்தொகை அல்லது மாற்றத்தக்க சொத்து

assimilation: (உட.) செறிமானம் : உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும்

assume : புனைந்துகொள்: ஆராயாது ஊகஞ் செய்து கொள்ளுதல்

A-stage rasins: (குழை.) நிலை நிறுத்துப் பிசின்கள் : சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய பிசின்கள். இவை கரையக் கூடியனவாகவும், எளிதில் உருகி இளகக் கூடியனவாகவும் இருக்கும். தொடக்க நிலையில் மட்டுமே வினை புரியக்கூடியவை. செறிவுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிசினின் இயல்பான நிலை இதுவாகும்

astatic galvanometer : (மின்.) நிலையற்ற மின்னோட்ட மானி : நிலையற்ற ஊசிகளைப் பயன்படுத்தி பூமியின் காந்தத் தன்மையின் விளைவினை மட்டுப்படுத்தக் கூடியதும் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் காட்டக் கூடியதுமான ஒரு மின்னோட்ட மானி

asteroid: (விண்.) விண்கற்கள்: செவ்வாய்க்கும், வியாழனுக்குமிடையே கோள்களுடன் உடனொத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்கள்

asthma: (நோயி.) மூச்சு இழைப்பு நோய் (ஆஸ்த்மா): நுரையீரல்களுக்குச் செல்லும் குழாய்கள் திடீரெனச் சுருங்குவதால் ஏற்படும் மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய்

astigmatism : (நோயி.) உருட்சிப்பிழை: கண்பார்வையின் முனைப்பமைதிக் கேடு

astragal : (க. க.) கண்ணறைத் தாங்கி: ஒரு சிறிய அரைவட்ட வடிவ வார்ப்படம். இது அலங்கார வேலைப்பாடுகளுடனோ இல்லாமலோ இருக்கும்.பெரும்பாலும் கதவுகளுக்கிடையிலான இணைப்புகளைத் தாங்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது

astrobiology: வான்கோள் உயிரியல் : வான்கோளங்களிலுள்ள உயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றின் உயிர்வாழ்க்கை பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை

astrogation: விண்வெளி மீகாமம்: விண்வெளியில் விண்வெளிக் கலங்களை அவற்றுக்குரிய திசைகளில் செலுத்துதல்

astronaut: விண்வெளி வீரர்: விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார்