பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
613

பட்டு ஒருவர் தொடர்பு கோருகிறார் என்பதை அறிந்து கொள்வார்

telephone exchange : (மின்.) தொலைபேசி இணைப்பகம் : ஒரு பிரிவுக்குள் தொலைபேசி வைத்திருப்போர் இடையிலும், பிற இணைப்பகங் கள் மூலம் தொலைபேசி கட்டமைப்புக்குள்ளான வேறு ஒரு தொலைபேசியுடனும் இணைப்புகளை அளிக்க சுவிட்ச் பலகைகளைக் கொண்ட மத்திய அமைப்பு

telephone hook switch : தொலைபேசி கொக்கிவிசைக் குமிழ்: தொலைபேசியில் ரிசீவரின் எடை காரணமாகச் செயல்படுகின்ற பிரி நிலை நெம்புகோலினால் கட்டுப் படுத்தப்படும் சுவிட்ச். தொலை பேசி மணி அடிப்பதுமற்றும் பேசு வதற்கான சர்க்கிலும் செயல்படுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுவது

telephony: தொலைபேசி இயக்கம்: ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசிகள் தொகுப்பின் இயக்கம்

telephoto : (மின்) தொலை ஒளிப்படம் : தொலை நோக்காடியுடன் ஒளிப்படக் கருவியை இணைத்து ஒளிப்படம் எடுக்கும் முறை

telephoto lens ; தொலைநோக்கி லென்ஸ்: மிகத் தொலைவில் உள் ள பொருட்களின் மிகப் பெரிய காட்சிகளை அளிப்பதற்காகப் பயன்படும் மிகக் குறுகிய கோணமுள்ள லென்ஸ்

teleprinter : (அச்சு) தொலை அச்சடிப்பான் : தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் தந்தி முறையில் தட்டச்சடிக்கும் பொறி

telescope : (இயற்.) தொலைநோக்கி : தொலைவில் உள்ள பொருளின் தெளிவான, பெரிய காட்சியைப் பெறுவதற்காகப் பயன்படும் பார்வைக் கருவி

telescoping gauge:(உலோ ) தொலைநோக்கி அளவுக் கருவி :துளைகளின் உட்புற விட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி. இதில் அளவிடு கருவி துளையினுள் செருகப்பட்டு இயன்றவரை உச்ச அளவுக்கு விரிவடைய அனுமதிக்கப் படுகிறது. பின்னர் அளவிடு கருவியைப் பூட்டிவெளியே.எடுத்து ஒரு நுண்ணளவைமானி மூலம் விட்டம் அளவிடப்படுகிறது

teletherapy: (மருந்) கதிரியக்க மருத்துவம்: புற்று நோய் முதலிய வற்றில் உடலில் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் (x-rays) குணப்படுத்தும் முறை

teletype : (மின்.) தொலைத் தட்டச்சு : சாதாரண மொழியைக் குழுஉக் குறிகளைச் சாதாரண மொழியாகவும் தட்டச்சு செய்து தரும் ஓர் எந்திரம். இது ஒரு தட்டச்சுப் பொறி போன்றே அமைப்புடையது

television: தொலைக்காட்சி: தொலைவில் நடப்பதைக் காணும் சாதனம்.ஒரு காட்சியை வரியிடு முறையின்படி சிறு சிறு துணுக்கு களாகப் பிரித்து எண்ணற்ற நுண்ணிய மின் சைகைகளாக் மாற்றி அனுப்பும் ஒரு வகை தகவல் தொடர்புச் சாதனம். பெறப்படும் மின் சைன்ககள் மறுபடி ஒளி-நிழல் துணுக்குகளாக மாற்றப்படும் போது தொலைக்காட்சித் திரையில் ஆரம்பத்தில் படமாக்கப்பட அசல் காட்சியாகத் தெரிகிறது

television camera tube : தொலைக்காட்சி படக் குழாய் : ஒரு காட்சியில் ஒளி நிழல் பகுதிகளை மின் குறிகளாக மாற்றுவதற்குப்