பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
615

tenacity : கெட்டிமை : கிழித் தெறிய முற்படுகிற விசைகளை எதிர்த்து நிற்க ஒரு பொருளுக்கு உள்ள தன்மை

tenom :(மர.வே.) நாக்கு :இரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு, இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருத்தும், இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும்

tenon saw ; (மர.வே.) முதுகு ரம்பம் : வேலை மேடைமீது மரத் தொழிலாளர் பயன்படுத்துகிற முதுகுப்புறத்தில் கெட்டிப் பட்டையுள்ள சாதாரண முதுகு ரம்பம்

tensile : (பொறி.) இழு தன்மையுடைய : எளிதில் அறுத்துவிடாமல் நீளமாக இழுக்கத்தக்க, நீட்டத்தக்க,இழுதிறன் கொண்டது

tensile strain : (பொறி) விறைப்பாற்றல் : நீளவாட்டில் இழுத்தல் அல்லது நீட்டுதல் நிலையில் ஏற்படும் எதிர்ப்பு, நசுக்குவதற்கு நேர்மாறானது

tensile strength : (பொறி) இழு தாங்கு வலிமை : இழுக்கும் விசையை எதிர்த்து நிற்க ஒரு உலோகக் கட்டைஅல்லது பொருளுக்குத் தேவையான வலிமை. (இயற்) பிய்த்துக் கொள்ளும்வரை ஒரு பகுதி தாங்கி நிற்கிற, நேரடியாக செலுத்தப்படுகிற இழுவிசை, இது ஒரு சதுர அங்குல குறுக்குப் பரப்புள்ள தண்டை உடைப்பதற்குத் தேவையான இவ்வளவு பவுண்ட் விசை என எண்களில் அளிக்கப்படுகிறது

tensile stress : (பொறி) இழுப்புத் தாங்கு விசை :ஒரு தண்டு அல்லது ஒரு பொருள் இழுப்புக்குள்ளாகும் போது அதை எதிர்த்துத் தாங்கி நிற்பதற்காகத் தோன்றும் விசை

tension : இழுவிசை : இழுக்கின்ற அழுத்தலுக்கு நேர் எதிரானது

tension spring: (எந்) இழுப்பு விசை சுருள் வில்: இழுப்பு விசையின் கீழ் செயல் படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட விசை திருகு சுருள்வில்

terminal : (க.க) முடிவிடம்: சுழல் படிக்கட்டு தாங்கு தூண் அல்லது தாங்கு தூணின் பூச்சு, (மின்) மின் சாதனம் ஒன்றுக்கும் வெளி சர்க்கியூட்டுக்கும் இடையிலான இணைப்பு நிலை

termite:(உயி.) கறையான்(செல்): இது எறும்புபோல் தோற்றமுடைய 'வெள்ளை எறும்பு.' இது மரங்களை அழிக்கிறது. இது பெரிய அளவில் கடினமான மண் புற்றுகளை உருவாக்குகிறது

term of patent : காப்புரிமைக் காலம் : ஒருவருடைய காப்புரிமைக்கு முழுப் பாதுகாப்புக் காலம். இது நீட்டிப்பு எதுவும் இன்றி புதினேழு ஆண்டுகள் தொடங்கும்

ternary alloy : (உலோ) மூவுலோகக் கலவை : மூன்று வேறு பட்ட உலோகங்கள் அடங்கிய ஒரு இக்கலான உலோகக் கலவை

ternary steel : (உலோ) உருக்கு உலோகம் : இரும்பு, கார்பன், மற்றும் ஏதேனும் ஒரு விசேஷத் தனிமம் கலந்த எல்லா வகையான கலோக உருக்குகளுக்குமான பொதுப் பெயர்

terneplate (உலோ) மட்டத் தகரம் : காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள்