பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

620

thermostatic: வெப்பச் சீர்நிலைக் கருவி: வெப்பச் சீர்நிலை (வெப்ப மேற்று) நீராவி மூலம் வெப்ப மேற்றும் முறைகளில் காற்றையும் படிவுத் திவலைகளையும் நீராவி வெளியேற வாய்ப்பின்றி ரேடியேட்டரிலிருந்து வெளியேற்றுதல்.வெளியேற்று வால்வு எளிதில் ஆவியாகிற திரவம் நிரம்பிய இடைத் திரையினால் இயக்கப்படுகிறது. இது விரைவாக சுருங்கவோ, விரியவோ செய்கிறது

'thermostatic element : வெப்பச் சீர்நிலைக் கோட்பாடு: : வெப்பச் சீர்நிலை இயக்கி குறிப்பிட்ட வெப்ப நிலையில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இயக்கி அல்லது கருவியானது அக்குறிப்பிட்ட வெப்பத்தைப் பெறும்போது வால்வைத் திறக்கும் அல்லது மூடும் சுவிட்ச் அல்லது வேறு உறுப்புகளை இயக்கும். பொதுவில் இது சுருள் வடிவில் இருக்கும். அல்லது ஈதர் அல்லது வேறு திரவம் நிரப்பப்பட்டு இரு புறங்களிலும் சீலிடப்பட்ட வெற்று உலோகக் குழலாகவும் இருக்கலாம். விரியும் போது அல்லது சுருங்கும்போது ஒரு பட்டாம் பூச்சி வால்வை இயக்கும் இரு உலோகப் புயமாகவும் இருக்கலாம். இது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதல்ல

thickness gauge or feeler : (எந்.) பருமன் அளவுமானி : இது பேனாக் கத்தி போன்ற வடிவம் பருமன் கொண்டது. இதன் விளிம்புகள் ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் இவ்வளவு பங்கு என்ற அளவில் பருமன் வித்தியாசப்படும். மோட்டார் வாகன வால்வுகள் போன்ற உறுப்புகளில் இடைவெளி அளவை சரிப்படுத்தப் பயன்படுத்தப்படும்

thickness ratio : (வானூ) திண்மை விகிதம்: விமான இயக்கக் கட்டுப்பாட்டுப் பரப்புகளின் அதிகபட்ச பருமனுக்கும் அவற்றின் குறுக்குக் கோட்டுக்கும் இடையே உள்ள விகிதம்

thick space : (அச்சு) தடிப்பு இடை வெளி : எந்த ஒரு குறிப்பிட்ட முகப்பிலும் மூன்று முதல் ஒரு 'யெம்' வரையில் அமைக்கப்பட்ட இடைவெளி

thimble : விரற்சிமிழ் : சிறுகுழாய் (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப்படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல்

(2) கயிறு அல்லது கேபிள் தேயாமல், பிரியாமல் இருப்பதற்காக அதன் நடுவே பொருத்தப்படுகிற குழிவுகள் கொண்ட வளையம்

T hinge: (க.க.) 'T' வடிவ கீல் : கிட்டத்தட்ட T வடிவிலான கீல் பட்டையான அமைப்புடன் நேர் கோணத்தில் இணைந்த மற்றொரு பட்டையைக் கொண்டது. முக்கியமாக கதவு, கேட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவது

thin space : (அச்சு) மென் இடைவெளி :சொற்களிடையே ஐந்து முதல் ஒரு யெம் வரை அமைக்கப்பட்ட இடைவெளி

thoriated-tungsten : (மின்.) தோரிய மின்னிழைமம் : மெல்லிய தோரியம் முலாம் பூசப்பட்ட ஒரு மின்னிழைம (டங்ஸ்டன்) உமிழ்வி

thorium : தோரியம் : (1) சுடரொளி விளக்குகளின் வலைக்குப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்