பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
623

three-way switch : (மின்) மூன்று வழி மின் விசை: ஒரு மின் விளக்கு அல்லது பல மின் விளக்குகளை வெவ்வேறான இரு இடங்களிலிருந்து இயக்குவிப்பதற்கான ஒரு சுவிட்ச்

three-wire method: மூன்று கம்பி முறை : அமெரிக்க தர நிர்ணய அமைப்பு சிபாரிசு செய்தபடி திருகுகளில் புரிகள் நடுவில் உள்ள இடைவெளியை அளக்கும் முறை. பயன்வழி கையேட்டைக் காண்க

three-wire circuit : (மின்) முக்கம்பி மின்சுற்றுவழி : மூன்று கம்பிகள் கொண்ட மின்சுற்றுவழி அமைப்பு. இது மைய அல்லது நடு நிலைக்கம்பிக்கும், புறக்கம்பிகளில் ஏதேனும் ஒன்றுக்குமிடையிலான மின்னழுத்த வேறுபாட்டினை 120 ஓல்ட்ஸ் அளவுக்கும், புறக் கம்பிக்களுக்கிடையிலான இரு மின்னழுத்த வேறுபாட்டினை 250 ஓல்ட்ஸ் அளவுக்கும் வழங்குகிறது .இது இரு தொடர்வரிசை தொடுப்பு மின்னாக்கிகளின் தத்துவத்தின்படி அமைக்கப்படுகிறது

three wire distribution: (மின்) முக்கம்பிப் பகிர்மானம் : நேர் மின்னோட்ட மின்சுற்று வழிகளில் மூன்று கம்பிகள் வாயிலாக நடை பெறும் மின் வழங்கீடு. இதில் ஒரு கம்பி நேர்மின் கம்பியாகவும், இரண்டாவது எதிர்மின் கம்பியாகவும், மூன்றாவது நடுநிலைக் கம்பியாகவும் செயற்படுகிறது. மின் விசையை நடுநிலை கம்பியிலிருந்தும், நேர்மின்கம்பி அல்லது எதிர்மின் கம்பியிலிருந்தும் எடுக்கலாம்

threshold (க.க.) தலைவாயில் : 1. ஒரு கட்டடத்தின் நுழைவு வாயில் 2. கதவுக்கு அடியில் அமைந்த மரப்பலகை கல்பலகை, அல்லது உத்தரம்

threshold of sound : (மின்) குறும ஒலி: ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணில், காதால் கேட்கக் கூடிய ஒலியின் மிகக் குறைந்த அளவு

third-angle projection : மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம் : அமெரிக்காவில் பின்பற்றப்படுகிற எந்திரவியல் வரைபடங்களில் வெவ்வேறு தோற்றங்களை எடுத்துக்காட்டல். பொதுவில் வரைபட அதாவது மேலிருந்து காட்சி, முன்பக்கக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, பின்புறக்காட்சி ஆகியவை எடுத்துக்காட்டப்படும். ஒவ்வொரு காட்சியும், எடுத்துக்காட்டப்பட்ட பக்கக் காட்சியின் பின்புலனாக வைத்துக் காட்டப்படும்

third brush ; (தானி) மூன்றாம் பிரஷ் : புலம்-சுற்று மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின்னாக்கியின் மின் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தும் துணை பிரஷ்

third-class lever : (எந்) மூன்றாம் வகை நெம்புகோல் : விசையானது எடைக்கும் ஆதாரத் தானத்துக்கும் இடையே செலுத்தப்படும் நெம்புகோல்

thrips (உயி.) செடிப்பூச்சி : வயல்களிலும் தோட்டங்களிலும் வெங்காயம், திராட்சை போன்ற செடிகளை அரிக்கும் பூச்சி வகை

throat : (க.க.) கணப்புத் தொண்டை: கணப்பிலிருந்து புகை அறைக்குச் செல்லும் திறப்பு (எந்திர) துளை வெட்டும் எந்திரத்தில் வெட்டு கருவிக்குப் பின்னால் உள்ள இடைவெளி போடப்படும் துளையின் அளவு இந்த இடைவெளியின் ஆழத்தைப் பொருத்தது