பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
627

(2) பற்று வைப்புக்கோல் மீது அதைப் பயன்படுத்தும் முன்னர் பற்று வைப்புப் பொருளைப் பூசுவது

tin plate: கரத் தகடு: ஈயம் பூசப்பட்ட. மல்லிய உருக்குத் தகடு

tin smith ; தகர வேலைக்காரர்: தகரத் தகடுகளைக் கொண்டு பொருட்களைத் தயாரிப்பவர்

tin snips: (உலோ;வே.) தகர வெட்டுக் கத்திரி: உலோகத் தகட்டு கத்தி வெட்டு அதற்குப் பயன்படுத்தும் வேலைக்காரர்கள் கையால் இயக்கும் கத்திரிக்கோல்

tint block: செதுக்குருப்பாளம்: டின்ட் பிளாக் (அச்சு.) ஒரு திட வண்ணத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான உலோகத்தால் ஆன அல்லது பிளாஸ்டிக் முகப்புக் கொண்ட் உலோகத் தகடு, பொதுவில் வண்ணம் லேசாக அல்லது அடிப்படை வண்ணத்துக்கு மாறுபாடு காட்டுவதாக இருக்கும்

tints: (வான்.) மென்னிறம்: லேசான நிறங்கள், குறிப்பாக ஓரளவு வெண்மை கலந்த நிறங்கள்

tip radius: (வானூ) நுனி ஆரம்: சுழல் அச்சிலிருந்து சுழலிப் பட்டையின் வெளி விளிம்பு வரையிலான தூரம்

tire bolt: பட்ட ஆணி : சக்கரத்தின் வெளிப்புற மரப்பகுதி மீது உலோகப்பட்டை பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் துளை யற்ற பட்டையான தலை கொண்ட போல்ட்

tire tool: (தானி.) டயர் மாற்றும் கருவி: மோட்டார் வாகன டயர்களை அகற்றுவதற்காகப் பயன் படும் இரும்பு அல்லது உருக்குப் பட்டை இவ்விதமான் எந்த ஒரு கருவியையும் டயர் மாற்றும் கருவி எனலாம்

tissue: திசு (இழைமம்): உடலின் ஒரு பகுதியாக அல்லது படலமாக ஆமைந்துள்ள உயிரணுக்களின் திரளை. எடுத்துக்காட்டு தசைத் திசு; தோல் திசு; இணைப்புத் திசு; நரம்புத் திசு

tissue manila: மெல்லிய மணிலா: உறுதியான நாரினால் ஆன மணிலா நிறமுள்ள மெல்லிய காகிதம்

tissue paper: மெல்லிழைத் தாள்: பல்வேறான தரம் கொண்ட மிக மெல்லிய காகிதத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்

titanium: (உலோ) டைட்டானியம்: கரிமக் குழுவைச் சேர்ந்த உலோகத் தனிமம். தாமிரம், வெண்கலம் மற்றும் இதர உலோகங்களுடன் சேர்த்து கலோகம் செய்யப் பயன்படுத்தப்படுவது. வெள்ளை வண்ணத்தில் டைட்டானியம் ஆக்சைட் முக்கியப்பொருள். இதைப் பயன்படுத்தும் பெயிண்டுகள் மிக நன்கு உழைக்கின்றன

titanium dioxide: (வண் ) டைட்டானியம் ஆக்சைடு: ஒரு வெண்ணிற நிறமி. வண்ணங்கள் தயாரிப்பதில் மிகுதியாகப் பயன்படுகிறது. இது வேதியியல் வினைபுரிவதில் செயலற்றது. நீர்த்து அமிலங்கள், வெப்ப்ம், ஒளி_இவற்றால் இது பாதிக்கப்படுவதில்லை

title block: தலைப்பு மூலை; ஒரு வரைபடத்தில் பொதுவில் வலது புறத்தின் கீழ்மூலையில் அல்லது கீழ்ப்புறம் நெடுக, கம்பெனியின் பெயர். வரைபடத்தின் தலைப்பு, அளவு அலகு, தேதி, மற்றும்