பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
629

toggle : (எந்.) இறுக்கி பிடிப்பு : நடுவில் கீல் கொண்ட இரட்டை இணைப்பு

toggle bolt: (மின்.) இறுக்கத் தாழ்ப்பாள்: உள்ளீடற்ற ஓட்டினால் ஆன சுவரில் பொருத்துவதற்கானது. இதில் திருகாணியின் தலைப்புறத்தில் சுழலும் வளையம் இருக்கும். இதைத் திருப்பி நீளவாட்டு நிலைக்குக் கொண்டுவந்து அதில் தாழ்ப்பாளை மாட்டலாம்.பின்னர் அதைச் செங்குத்து நிலைக்குத் திருப்ப முடியும்

toggle switch : (மின்.) இறுக்க மின்விசை மாற்றுக் குமிழ் : குமிழ் அல்லது நீட்டிக் கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின்விசை மாற்றுக் குமிழ்

tolerance : (எந் ) ஏற்கைப் பிசகு : தயாரிக்கப்பட்ட எந்திர உறுப்புகளின் அளவுகள் ஏற்கத்தக்க அளவு கூடக் குறைய இருப்பது. ஏற்கத்தக்க அளவுக்கு உள்ள அளவுப் பிசகு. (எந்) ஏற்கை வரம்பு என்றும் குறிப்பிடப்படும்

toluene : (வேதி,) சாயப் பிசின் : நிலக்கரித் தாரிலிருந்து தயாரிக்கப்படுவது. இது முக்கியமாக சாயப்பொருட்களையும், T.N.T. தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது

toncan metal : (உலோ.) டொங்கன் உலோகம் : மிகவும் நேர்த்தியான கார்பன் மிகக் குறைவான உருக்கு அல்லது இரும்பின் வணிகப் பெயர். அரிமானத்தை நன்கு எதிர்த்து நிற்பதால் உலோகத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது

tone : (வண்.) வண்ண நயம் : வண்ணச் சாயை (நிறம்) ஒரு வண்ணத்தின் தன்மை அல்ல்து அளவை அது அழுத்தமாக உள்ளதா அல்லது லேசாக உள்ளதா என்று குறிப்பிடுவது

tone arm (மின். ஒலியிணைப்புக் கரம் : இசைப்பாடற் பெட்டியில் உள்ள ஒலியிணைப்புக் கை

tone control : (மின்) தொனிக் கட்டுப்பாட்டுக் கருவி : ஒலி மிகைப்பியில் ஒலி அதிர்வலைகளைக் குறைப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்குப் பயன்படும், தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய சாதனம்

tongs : இடுக்கி: ஒரு பொருளைப் பிடித்து எடுப்பதற்கு அல்லது ஒரு பொருளை அடித்து, தட்டி வேலை செய்ய அதை நன்கு பற்றிக் கொள்வதற்குப் பயன்படும் இரு புயங்களைக் கொண்ட கருவி

tongue (மர.வே.) காக்கு : ஒரு சட்டம் அல்லது பலகையின் ஓரத்தில் தக்க வடிவில் வெட்டி உருவாக்கப்பட்டு அளவில்,சிறியதாகத் துருத்தி நிற்கிற பகுதி. இது இன்னொரு சட்டம் அல்லது பலகையில் தக்க வடிவில் வெட்டி அகற்றப்பட்ட பள்ளமான பகுதியில் நன்கு பொருத்தி இரண்டையும் நன்கு சேர்க்க உதவுகிறது

tonic (மருந்) சத்து மருந்து : உடலுக்கு அல்லது உடலின் சில உறுப்புகளுக்கு உரமூட்டி, வலிமையூட்டுகிற மருந்து

tonsils : (உட.) அடிநாச்சதை : உள்வாயில் நாக்கில் அடியிலுள்ள இரு சிறு சுரப்பிகள், இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன