பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

632

torsional strength : (பொறி) முறுக்கு திறன் : முறுக்கு விசையை எதிர்த்து, தாங்கி நிற்பதற்கு ஒரு தண்டு போன்றவற்றுக்கு உள்ள திறன். இத்திறன் ஒரு தண்டின் குறுக்களவின் முப்படிக்கு ஏற்ப மாறுபடுகிறது

torsion balancer : (தானி) திருகு சமனாக்கி : பிஸ்டனின் உந்தல்களால் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்கும் பொருட்டு கிராங்க்ஷாப்டின் முளையில் பொருத்தப்பட்ட கருவி

torsion spring ; திருகு விற்சுருள்: மேலிலிருந்து கீழாக வளைந்து வளைந்து புரிபோல அமைந்த ஸ்பிரிங். இதன் இரு முனைகளும் நன்கு பொருத்தப்பட்ட நிலையில் அழுத்தப்படும்போது சுருளுவதும், நீளுவதுமாக இருக்கும்

torso : (க.க.) சிலை முண்டப் பகுதி : (1) கட்டுமானக் கலையில் உருமாறிய தூண்களைக் குறிப்பது (2) தலைப்பகுதி இல்லாமல் உடல் மட்டுமே காணப்படுகிற சிலை


torus (க.க.) பீடப் புடை வளையுறுப்பு ; பெரிய வடிவிலான குவிந்த அமைப்புக்கொண்ட அரைவட்ட அச்சு, அடித்தளத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுவது

tote boxes or pans : (பட்) உதிரிப் பொருள் கிண்ணம் : தொழிற்சாலைகளில் சிறிய உறுப்புகளை சேமித்து வைக்க அல்லது எடுத்துச் செல்வதற்குப் பொதுவில் பெட்டிகள் அல்லது உலோகத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவில் சற்று சரிவான வடிவில் இருக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து அடுக்குவதற்கு இது வசதியாக இருக்கும்

touchdown : (விண்) தரையிறங்குதல் : மனிதனால் இயக்கப்படும் அல்லது தானே இயங்கும் ஒரு விண்வெளிக்கலம், சறுக்கு முறையில் அல்லது வேறெந்த முறையிலேனும் பூமியில் தரையிறங்குதல்

toughness : (பொறி) கடினத்துவம் : நிரந்தர உருமாற்றத்தை எதிர்த்து நிற்பதிலும், அவ்வித நிரந்தர உருமாற்றம் ஏற்பட்ட பின்னர் முறிவை எதிர்த்து நிற்பதிலும் ஓர் உலோகத்துக்குள்ள திறன்

touring car: (தானி.) உலா கார் : ஐந்து அல்லது ஏழு பயணிகள் ஏறிச் செல்கின்ற வகையில் அமைந்த திறந்த உடற்பகுதி கொண்ட கார்

toxamin : ஊட்ட எதிர்பொருள் : வைட்டமின் எதிர்ப்புப் பொருள். இது வைட்டமின்கள் செயற்படுவதைத் தடுக்கிறது. எடுத்துக் காட்டாக, முட்டையிலுள்ள வெண்கரு, 'B' குழும வைட்ட மின்களுடன் இணைந்து, அவை உடலின்மீது வினைபுரிவதைத் தடுக்கிறது

toxicology : நச்சூட்ட ஆய்வியல் :நஞ்சுகள் பற்றி ஆராயும் அறிவியல் துறை

tourmaline : (மின்) டூர்மாலின் : பலவகை மின்திறமிக்க பல வண்ணக் கனிமப் பொருள் வகை

T plate (க.க.) 'T' வடிவத் தகடு: ஆங்கில 'T' வடிவம் கொண்ட ஓர் உலோகத் தகடு. இரு பரப்புகள் ஒன்று சேரும் இணைப்புப் பகுதியை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவது

trace : பற்றி வரை (வரைதல்) : மூலவரைபடம், தேசப்படம்