பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
633

போன்றவற்றின் மீது மெல்லிய துணி அல்லது காகிதத்தை வைத்து அதன்மீது கோடு வரைந்து பிரதி எடுத்தல்; பென்சில் கொண்டு ஓரப் படம் தயாரித்தல்; தேசப்படம் தயாரித்தல்

tracer : பற்றி வரைவாளர் : வடிவரை வாளர் தயாரித்த வரைபடங்கள் மெல்லிய காகிதங்களை வைத்து பற்றி வரைப்பிரதிகள் பல வற்றை எடுக்கிற உதவியாளர் அல்லது துணை வடிவரையாளர்

tracer element : தடங்காண் மெய்யூடகம் : மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழிக் காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிமம்

tracer : (க.க.) ஊடு சித்திரம் : வட்ட வடிவ கண்ணாடி பலகணிகள், பலகணிகளுக்கு மேல் அமைந்த கண்ணாடிகள் ஆகியவற்றின் மீது ஊடுருவுகிற அலங்கார வேலைப்பாடுகளை அமைத்தல்

trachelium . (க.க) டிராக்கிலியம் : கிரேக்க டோரிக் பாணித் தூண்

tracing : பற்றி வரைதல் : (வரைபடம்) முதல் நிலை வரை படம், வடிவப்படம் வரைபடம் தயாரித்தல் மெல்லிய துணி, காகிதம் அல்லது ஒளி ஊடுருவுகின்ற விரிப்புப் பொருட்களை வரை படங்கள் மீது வைத்து பிரதிகளை எடுத்தல்

tracing a circuit : (தானி:மின்) மின்சுற்றுவழியைக் கண்டறி: (மோட்டார்-மின் மூலத்திலிருந்து இயக்க நிலைவரை ஒரு சர்க்கியூட்டை மீட்டரைப் பயன்படுத்தி, மணி அடிக்கி ஜெனரேட்டரைப் பயன்படுத்தி கோளாறைக் கண்டுபிடிப்பது அல்லது சர்க்கியூட்டை மேலும் நீட்டிப்பது நூல்களின் நிறத்தை வைத்து அடையாளம் காண்பது

tracing cloth : (வரை) மெருகச்சுத்துணி: ஒரு வரைபடத்தை நிரந்தரமாகப் படியெடுப்பதற்குப் பயன்படும் ஒளி ஊடுருவக்கூடிய ஒரு துணி

tracing linen : பற்றி வரையும் துணி : (வரைதல்) துணி மீது தக்க பூச்சு அளித்துப் பிறகு அத்துணியைப் பற்றி வரைதலுக்கு பிரதி எடுப்பதற்காக பயன்படுத்துதல்

tracing paper : பற்றி வரைதாள் : (வரைபடம்) ஓரளவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத் துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத போது பற்றி வரைத்துணியை விட பற்றி வரை தாள் உகந்தது

tracing tool : பற்றி வரைக் கருவி : தோல் மீது டிசைன்களை எழுதவும், அமைத்து முடிக்கவும் பயன்படுகிற கூரான சிறிய தொரு கருவி

track : (மின்.) ஒலித்தொடர் : ஒலியைப் பதிவு செய்கிற ஓர் ஒலிப்பதிவு நாடாவின் ஒரு பகுதி

tracking : (மின் ) தடத்தொடர்பு: வானொலியில் ஒருங்கியைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சுழல் அலைவெண்ணைப் பின்பற்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் இணைக் கும் முறை. செயற்கைக்கோளின் தடத்தை வானொலி மூலம் பின்தொடர்தல்

traction : டிராக்ஷன்: சாலை மீது சக்கரங்கள் உருளும்போது