634
ஏற்படுவது போன்ற உருள் உராய்வு. அல்லது பிடிமான உராய்வு
tractor air plane : (வானூ) டிராக்டர் விமானம் : தாங்கு பரப்புகளுக்கு முன்புறமாக அமைந்தி சுழலி அல்லது சுழலிகளைக் கொண்ட விமானம்
tractor propeller : (வானூ) டிராக்டர் புரொப்பல்லர்: விமான என்ஜினின் முன்புற முனை மீது அல்லது சுழலித் தண்டுக்கு முன்புறமாக அமைந்த சுழலி
trade-union : தொழிற் சங்கம்: உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத்தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு
traffic beam : (தானி.எந்) முகப்பொளிக் கற்றை: மோட்டார் வாகன முகப்பு விளக்கிலிருந்து தரையை நோக்கிப்படுகிற ஒளிக்கற்றை, எதிர்வரும் வாகன ஓட்டியின் கண் கூசாவண்ணம் இருக்க ஓர் ஏற்பாடு. நகரங்களின் சாலைகளில் இது பயன்படுவது ஊருக்கு வெளியே ஒட்டிச் செல்கையில் எதிரே வாகனம் வந்தால் பயன்படுவது
traffic control projector : (வானூ.) ஒளி சமிக்ஞை காட்டி : விமான ஓட்டிக்கு ஒளி சமிக்ஞைகள் அரிப்பதற்கான ஒரு புரொஜக்டர்
trailing edge : (வானூ ) பின் புற முனை: விமானக் கட்டுப்பாட்டுப் பரப்பு அல்லது சுழலியின் பின்புறமுனை
train : டிரெயின் (பணிக்கூடம்) : விசையை செலுத்தவும், வேகத்தை மாற்றவும் ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்ட பல்லிணை ஏற்பாடு
trammel :தண்டு வட்ட வரைவி : பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏற்பத் தலைப்பகுதியை அதில் உள்ள ஸ்குரு கொண்டு முடுக்கிப் பயன்படுத்தலாம்
tramp : (தானி ) மிதிச் சுழற்சி : சக்கரங்கள் எதிர்த் திசைகளில் மேலும் கீழுமாக இயங்குதல்
transceiver : (மின்) வானொலி இருமைக் கருவி : ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி
transcription: (மின்) நேரடி நிகழ்ச்சிப் பதிவு: தொலைக்காட்சியில் பின்னர் ஒளிபரப்புவதற்காக ஒரு நேரடி நிகழ்ச்சியைப் பதிவு செய்தல்
transducer: (மின்) இயல் மாற்றி: ஒருவகை ஆற்றலை, மின்னியல் ஆற்றல், எந்திர ஆற்றல், ஒலியாற்றல் போன்ற வேறு வகை ஆற்றலாக மாற்றுவதற்கான ஒரு சாதனம்
transept : (க.க.) இருபுறத் தாழ்வாரம் : சிலுவை வடிவில் அமைந்துள்ள சர்ச்சின் நுழைவாயிலின் மறு கோடியில் இருபுறங்களிலும் நீண்டு அமைந்துள்ள தாழ்வாரங்கள்
transfer : மாற்று: ஒன்றை