பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
635

ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அகற்றுதல்

transfer calipers : (எந்) மாற்றும் காலிபர்: இடுக்களையும் அத்துடன் அளந்த பின்னர் பணி நிலையிலிருந்து அகற்ற அளவை மாற்றியாக வேண்டியுள்ள இடங்களிலும் அளப்பதற்கான கருவி. பணிநிலையிலிருந்து எடுத்த பின் கால்களை அளக்கப்படும் பகுதியின் மிகச் சரியான அளவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்

tranfer characteristic: (மின் ) பண்பு மாற்றம் : ஒரு சாதனத்தின் உட்பாட்டு, வெளிப்பாட்டுப் பண்புகளுக்கிடையிலான தொடர்பு

transfer machine : (தானி) இடமாற்று எந்திரம் : பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் திறனுள்ள ஓர் எந்திரம். அந்தப் பொருள் மீது ஒவ்வொரு இடத்திலும் பல வேலைப்பாடுகள் செய்யப்படும்

transfer molding . (குழை) மாற்றிடும் அச்சு: உள்வீச்சு வார்ப்புக்கு அதாவது வெப்பம் அளிக்கப்பட்டு குளிர்ந்த பின் உறுதியாகிய பொருட்களை வார்ப்பதற்கு மற்றொரு பெயர்

transformer: (மின்) மின்மாற்றி: மின்னோட்டத்தில் மின்னழுத்தத்தையும் மின் அளவையும் உயர் நிலையிலிருந்து குறைந்த நிலைக்கு அல்லது குறைந்த நிலையிலிருந்து உயர் நிலைக்கும் மாற்றுவதற்கான சாதனம்

transformer current : மின்னோட்ட மின்மாற்றி:' மின்மானிகளின் இயக்கத்திற்கேற்ப பேரளவு மின்னோட்டங்களை சிற்றளவு மின்னோட்டங்களாகக் குறைப்பதற்குப் பயன்படும் ஒரு மின் மாற்றி

transformer potential (மின்) மின்னழுத்த மாற்றி : அதிக அளவு மினனழுத்தங்களைக் குறைந்த அளவு, மின்னழுத்தங்களைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி

transfusion : குருதியூட்டுதல்: நோயுற்ற ஒருவரின் உடலுக்குள் நலமாகவுள்ள ஒருவரின் இரத்தத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்துதல். செலுத்தப்படும் இரத்தம், நோயாளியின் இரத்தம் எந்தப்பிரிவைச் சேர்ந்ததோ அதே பிரிவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்

transient response : (மின்) குறுநேர எதிர்வினை : கணநேரச் சமிக்ஞைக்குரிய அல்லது விசைக்குரிய ஒரு குறுகியநேர எதிர்ச் செயல்

transistor . (மின்.) டிரான்சிஸ்டர் (மின்) : மின்னணு மின்னோட்டங்களில்_முன்னர் வெற்றிடக் குழல்கள் செய்து வந்த பணிகளைச் செய்கின்ற அடக்கமான சின்னஞ் சிறிய பொருள். வடிவில் சிறியது சூடேறாது. உடனடியாகச் செயல்படுவது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் வாய்களைக் கொண்ட தீவிர அரைக் கடத்திக் கருவி

transistor radio : (வானொ.) மின்மப் பெருக்கி வானொலி : வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மின்மப் பெருக்கிகள் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்படும் வானொலி. இவை மின்சுற்றுவழி, விசை வழங்கீடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் நுண்பதிப்பு