பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
637

transmission line: (மின்) மின் அனுப்பீட்டுக் கம்பி: முன்விசையைச் செலுத்துவதற்கு அல்லது கொண்டு செல்வதற்குப் பயன்படும் கம்பி அல்லது கம்பிகள்

transmitter ;(மின்) ஒலிப்பரப்பனுப்பீட்டுக் கருவி: தொலைபேசிக் கருவியில் பேசுகின்ற முனையைக் குறிக்கும். இது இரு தட்டையான கரிம மின்வாய்கள் உள்ளன.இவற்றில் ஒன்று அசையும்

transmitting set: அனுப்பு சாதனம் : குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மாறலை அல்லது தொடர்ச்சியான ஊர்தி அலையைத் தோற்றுவிப்பதற்குப் பயன்படும் சாதனம்

transmutation: (மின்) தனிம மாற்றம்: ஒரு தனிமத்தை வேறு தனிமமாக மாற்றுதல் கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியத் தயாரிப்புகளிலிருந்து வெளிப்படும் துகள்களைக் கொண்டு தாக்குவதன் மூலம் சமீப ஆண்டுகளில் தனிமங்களை வேறு ஒன்றாக மாற்றுவது சாதிக்கப்பட்டுள்ளது. சைக்ளோட்ரானைப் பயன்படுத்தி இதைச் சாதிப்பது மற்றொரு முறை

transom: (க.க.) சிறு சாளரம் : (கட்டட) ஒரு கதவு அல்லது ஜன்னலுக்கு மேலாக உள்ள சிறு கதவு.

transom: (க.க.) குறுக்குக் கட்டை : வாசற்படிநிலைக் குறுக்கட்டை

transombar: (க.க.) நடுச்சட்டம்: கதவை, ஜன்னலை இரண்டாகப் பிரிக்கிற கிடைமட்டமாக அமைந்த நடுச்சட்டம். இதன் பலகை மேல் பகுதியை மட்டும் தனியே திறக்க முடியும்

transparency: ஊடுருவு ஒளிப்படம்: இதுவும் ஒரு ஒளிப்படமே எனினும் இது ஒளி ஊடுருவுகின்ற பிலிம் வடிவில் அமைந்த படம். ஒளியில் காட்டுவதன் மூலமே படத்தைக் காண இயலும்

transparent: ஒளி ஊடுருவுகிற: பொருட்களைத் தெளிவாகக் காண்கிற வகையில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது

transportation: (தானி) சரக்குப் போக்குவரத்து: சரக்குகளை உற்பத்திச் சாலைகளிலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு செல்லுதலும், உற்பத்திச் சாலைகளுக்கும் பொருள்களைக் கொண்டு வருதலும்

transpose: மாற்றிப்போடு: ஒரு சமன்பாட்டில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு உறுப்புகளின் சமத்துவ நிலை மாறாமல் இருக்க மாறிய அடையாளக் குறியுடன் மாற்றிப் போடுதல்

trap: நீராவி பொறியமைவு: நீராவியால் வெப்பமேற்றும் முறைகளில் நீர் படிதலையும், காற்றையும் ரேடியேட்டர் குழாய் முதலிய வற்றிலிருந்து நீராவியைச் செலுத்தாமல் வெளியேற்றுதல்

trap door: (க.க) கள்ளக் கதவு: தரையில், மச்சுப்புறத்தில் அல்லது கூரையில் அமைந்த திறப்பை மூடுவதற்கான கதவு அல்லது மூடி

trapezium: நாற்கரம் : எந்த இரு பக்கங்களும் இணையாக இல்லாத நான்கு புறங்களைக் கொண்ட வடிவம்

trapezoid: கோடகம்: நாற்கரம் கொண்ட உருவம். இதில் இரு புயங்கள் இணையானவை(கணித) பரப்பு= இணையாக உள்ள பக்கங்களின் கூட்டுத் தொகையில் பாதி X செங்குத்துக் கோட்டின் நீளம்