பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

640

trim size : ஓரம் வெட்டிய அளவு : ஓரங்கள் வெட்டப்பட்ட பின் பைண்ட் செய்யப்பட்ட பின்னர் உள்ள பக்கத்தின் அளவு

triode : (மின்.) மும்முனையம் : எதிர்முனை: வலை; தகடு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வெற்றிடக்குழல்

trip hammer : (எந்) விழு சம்மட்டி : விசைமூலம் இயங்கும் சம்மட்டி. இந்த வகை சம்மட்டியில் சம்மட்டி உயரே சென்ற பின் அது தானாகக் கீழே விழுகின்ற மாதிரியில் ஏற்பாடு இருக்கும்

triphibian (வானூ.) முத்திற விமானம் : நிலம், நீர், விழுபணி. அல்லது ஐஸ் கட்டித் தரையிலிருந்து கிளம்புவதற்கு அல்லது இறங்குவதற்கு வசதியான அடிப்புற சாதனம் கொண்ட விமானம்

triplane : (வானூ.) மூவிறக்கை விமானம் : ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று இறக்கைகள் அமைந்த விமானம்

triple case : (அச்சு) மூன்று கேஸ் : வெவ்வேறான மூன்று வடிவங்களில் உள்ள எழுத்துகளைப் போட்டு வைப்பதற்கான பல அறைச் சட்டம்

triple point : (குளி.பத.) மும்மடி நிலை : வாயு, திரவ, திட நிலையிலுள்ள மூன்று பொருட்கள் சமநிலையில் இருக்கக்கூடிய நிலையான மையம்

triplex steel : (உலோ.) முப்படி உருக்கு : பெஸ்ஸிமர் முறை. திறந்த உலைமுறை, மின்சாரமுறை ஆகிய மூன்றையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உருக்கு

tripoli : திரிபோலி : பொடிப் பொடியாக உதிர்ந்து போகிற அளவுக்குத் தரம் கெட்டுப்போன சுண்ணாம்புக்கல், பாலிஷ் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

tripper : (பட்.) விடுவை : எந்திரத்தில் ஓர் உறுப்பு திடீரென மற்றோர் உறுப்பை விடுவிக்கிற ஏற்பாடு அல்லது அவ்விதம் விடுவிக்கிற உறுப்பு. இந்த ஏற்பாடு கையால் இயங்குவதாக அல்லது விசையால் இயங்குவதாக இருக்கும்

tri-sect : மூவெட்டு : மூன்று சம பகுதிகளாகப் பிரித்தல்

tristimulus values : (மின்) முத்தூண்டல் மதிப்பளவுகள்: வண்ணத் தொலைக்காட்சியில், ஒரு மாதிரி வண்ணத்திற்கு இணையாக இணைய வேண்டிய ஒவ்வொரு அடிப்படை வண்ணத்தின் அளவு

triton (மின்:) டிரைட்டான்: ஒரு புரோட்டானும் இரு நியூட்ரான்களும் அடங்கிய உமிழ்வுத் துகள்

trivalent : (மின் ) மூவணு இணைவுத் திறன் : மூன்று அணுக்களுடன் இணையும் எலெக்ட்ரான்களின் திறன்

trochanter, (great trochanter:) (உட.) பெருங்கால் எலும்பு : காலின் உச்சிப்பகுதியின் புறத்தே தொட்டு உணரக்கூடிய எடுப்பான எலும்பின் பகுதி. காலை வெளிப்புறமாகத் திருப்புவதற்கும் காலைப் பக்கவாட்டில் திருப்புவதற்கும் பயன்படும் தசைகளில் சில இதனுடன் பொருத்தப்பட்டுள்ளன. சிறு கால் எலும்புத் தசைகள், முழங் காலை மேல்நோக்கித்தூக்க உதவுகின்றன

trolley : (மின்.) தொடு சக்கரம் : ஒரு சாதனத்தை இயக்க அல்லது சாலையில் ஓடும் வாகனம் இயங்குவதற்கு தலைக்குமேலே உள்ள