பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

642

truss rod: முட்டுக் மூலம் வலுவேற்றப்பட் தண்டின் இருமுனைகளிலும் பிணைக்கப்பட்ட கம்பி

try square : (எந்) அளவுச் சதுரம் : தாங்கள் கையாளும் பொருள் உண்மையில் சதுரமானதானதா என்று சோதிக்க மெக்கானிக்குகள் பயன்படுத்தும் ஒரு சிறு சதுரம், செங்கோணத்தைக் குறிக்கவும் இது பயன்படும்

T slot: (எந்.) T. குழி : கடைதல் ,இழைத்தல், மற்றும் வேறு பணிக்கான எந்திரத்தின் மேடையில் உள் வெட்டு மூலம் டி. போல்ட்டின் தலை உட்காருகிற அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட குழிவு. இக்குழிவானது டி. போல்ட்டை தக்க நிலைக்கு சரிபொருத்தம் செய்ய உதவும்

T slot cutter : (எந்) T குழிவெட்டுக் கருவி : குழிகளின் அகன்ற பகுதிக்கு நேர்த்தி அளிப்பதற்காகப் பயன்படுகிற கடைசல் வெட்டுக் கருவி

T sqaure : (க.க) T. சதுரம்: வடி வரைவாளர் பயன்படுத்தும் கருவி. இரண்டு முதல் மூன்று அங்குல அகலம் கொண்ட ஒன்று முதல் ஐந்து அடி நீளம் கொண்ட பட்டை. இதன் தலைப்புறத்தில் செங்கோண்மாக அமையும் வகையில் இப்படை பொருத்தப்பட்டுள்ளது. தலைப்புறப் பட்டை குறைந்தது இரு மடங்கு பருமன் கொண்டது. டி. சதுரமானது இணைகோடுகளையும் வரையப் பயன்படுவது

tube : (மின்.) குழாய்: ரேடியோ கலைகளைக் கண்டுபிடித்து பெருக்குவதற்கான கருவி, மற்றும் சிறு அளவு மின்சாரங்களைக் கண்டறியவும், இருதிசை மின்சாரத்தை நேர்திசை மின்சாரமாகத் திருத்துவதற்கும் பயன்படுகிற சாதனங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுகிற கருவிகள் உட்பட பொதுப்படையான சொல்

tube punch : (தோல்) குழல் துளைக்கருவி : கட்டிங் பிளையர் போன்று கையால் இயக்கித் துளையிடும் கருவி. துளையிடுவதற்கென குழிவான சிறு குழல் அல்லது குழல்கள் உள்ளன. பொத்தான் பொருத்துவதற்கு அல்லது கண் அமைக்க இவ்விதம் துளையிடப்படும்

tub-sizing : (அச்சு) தொட்டி முக்கு : காகிதத்தின் மேற்பரப்புக்கு நேர்த்தி அளிப்பதற்காகக் கூழ் பூச்சு அளிக்க பெரிய காகிதச் சுருளை கூழ் தொட்டியில் முக்குதல்

tubular axle : (தானி) குழல் அச்சு : உருக்கினால் ஆன குழலினால் செய்யப்பட்ட அச்சு

tubular radiator : (தானி.) குழாய்முறை வெப்பமகற்றி : வெப்பம் அகற்றும் சாதனம், பல சிறிய குழாய்களைக் கொண்டது. இவற்றின் வழியே நீர் பாய்ந்துசெல்லும் போது வெப்பத்தை எடுத்துக்கொண்டு குளிர்விப்பு நடைபெறுகிறது

tudor style : (க.க) டியூடர் பாணி : டியூடர் வம்ச அரசர்கள் இங்கிலாந்தை ஆண்ட காலத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைப்பாணி. பொதுவில் எட்டாம் ஹென்றி மன்னர் காலத்தைக் குறிப்பது