பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
643

tufting : குஞ்சத் தையல் : மெத்தை பதித்த உள்ளே இருக்கிற மென்பொருள் இடம் நகராமல் இருக்க அதையும் போர்த்து துணியையும் சேர்த்துத் தைத்தல்.குஞ்சத்தையல் போட்ட இடத்தில் போர்த்துத் துணியை கெட்டி நூல் அறுத்து விடாமல் இருக்க ஒரு பொத்தான் அமைக்கப்படும், அது பார்வையையும் அளிக்கும்

tulip tree : (மரம்.) துலிப் மரம்: போப்லார் அல்லது துவிப்போப் லார் எனப்படும் மரம். லேசான மஞ்சள் நிறம் கொண்டது. மென் மையானது. வேலைப்பாடுக்கு எளியது. வெள்ளை ஊசியிலை மரம் போல இதைப் பலவகைக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்

tumble : பிசிறு உருட்டு : வார்ப்படப் பொருட்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கப்பட்ட உடன் ஒரு பெரிய பீப்பாயில் போட்டு உருட்டுதல். ஒன்றோடு. ஒன்று நன்கு உராயும் போது பிசிறுகள் அகன்று இப்பொருட்கள் சுத்தமாகி விடும்

tumbling : (உலோ) உருட்டுச் சுத்திகரிப்பு : சிறு உலோகப் பகுதிகளைத் தனிவகை உராய்பொருள் களைக் கொண்ட சுழலும் பீப்பாய் வடிவ எந்திரத்தில் இட்டு உருட்டுவதன் மூலமாகத் துப்புரவு செய்து வடிவமைத்தல்

tumbled : (அச்சு) புரண்டு போதல் : அச்சிடப்பட்ட தாளை மேலிருந்து கீழாகப் புரட்டிப் பார்ப்பது, இது தவிர்க்கப்பட வேண்டும். வலமிருந்து இடமாகத் தான் புரட்ட வேண்டும்

tumbler gear :புரட்டு கியர்: வரிசையான பல கியர்களில் நடுவில் அமைந்த கியர்.இயக்கப்பட்ட கியரின் திசையை பின்புறமாக மாற்றுவதற்கு இது உதவும்

tumour, tumor:(நோயி) கழலை: உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். 'புற்றுக்கழலை' என்பதை மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக்கூடியதாகும். 'வெற்றுக்கழலை' என்பது சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்

tuned amplifier : (மின்) இசைவிப்பு மின் மிகைப்பி ; உட்பாட்டுப் பிணைப்புக்காவும், வெளிப்பாட்டுப் பிணைப்புக்காகவும் இசை விப்பு செய்த மின்சுற்று வழியைப் பயன்படுத்தும் ஒரு மின்மிகைப்பி

tuned circuit : (மின்.) இசைவிப்பு மின்சுற்றுவழி : கொண்மம், தூண்டம், தடை இம் மூன்றையும் வரிசையாக அல்லது இணையாகக் கொள்ள ஒரு மின் சுற்று வழி. இதற்கு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் விசை யூட்டும்போது, அதன் மின்கம்பிச் சுருளுக்கும் கொண்மிக்குமிடையில் ஆற்றல் பரிமாற்றம் நடை பெறுகிறது

tuner : அலைத்தேர்வி : தேவையான குறிப்பிட்ட ரேடியோ அலைகளை மட்டும் தேர்ந் தெடுத்து மற்ற அலைகளை நிராகரிக்கும் வகையில் சரியமைக்கப்படுகிற கன்டென்சர் சர்க்கியூட்

tung oil : (வண்) டங் ஆயில்: சீனாவிலும், ஜப்பானிலும் காணப்படும் டங் மரத்தின் விதை யிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய், வார்னிஷ் உலர்விகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது. சீன மர எண்ணெய் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு

tungsten : (வேதி) டங்ஸ்டன் : சில கனிமங்களில் குறிப்பாக