பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
647

முதல் எழுத்து; பெரிய அளவிலானது. இதன் உயரம் இரு வரிகள் அளவுக்கு உள்ளது

two-on: (அச்சு.) டூ ஆன்: ஒரே சமயத்தில் அதிகப் பிரதிகளை அச்சிட்ட இரண்டு அல்லது அதற்கு மேலான "பாரங்களை" அமைத்தல்

two-phase: (மின்) இரு ஃபேஸ்: இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள்

two-phase alternator: (மின்.) இரு ஃபேஸ் மின்னாக்கி: பல ஃபேஸ் நீர் திசை மின்சார மின்னாக்கி. ஃபேஸ் 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற வகையில் இரு வதை மின்னோட்டங்களை அளிக்கும் சுற்றுகளைக் கொண்டது

two-speed rear axle; (தானி. எந்.) இரு வேக பின் அச்சு: இந்த ஏற்பாட்டில் பின்புற அச்சில் இரு வேகச்சுற்றுக்கு அதாவது ஒற்றை வேக அச்சில் கிடைப்பதைப் போல இரு மடங்கு வேகத்துக்கு வழி செய்ய்ப்படுகிறது, குறிப்பாக லாரிகளில் இவ்விதம் செய்யப்படும். இதனால் என்ஜின் தேய்மானம் குறையும். பெட்ரோல் உபயோகம் குறையும்

two-tone steerhide: இரு வழி தோல் பயன்: விலை குறைந்த தோல் பொருள் புத்தகங்களை பைண்ட் செய்கையில் மேற்புறத்தில் அமைக்கவும், உறைப்பெட்டிகளின் மேற்புறத்தில் அமைக்கவும் பயன்படுவ்து. இயற்கை நிலையில் அல்லது பல வண்ணப் புள்ளிகளுடன் கிடைக்கப் பெறுவது

two way radio: இரு வழி வானொலி தொடர்புக் கருவி: பல்வேறு இடங்கள் இடையே ரேடியோ தொடர்பு கொள்வதற்கு உதவும் சாதனம். எங்கும் எடுத்துச் செல்லத்தக்கது. ரேடியோ அலைகளைப் பெறுவதற்கும் அனுப்புவதற்குமான கருவிகள் அடங்கியது

T wrench: 'T' வடிவ திருப்பு கருவி: 'T' வடிவில் உள்ள திருப்பு கருவி பற்றிக் கொள்வதற்குக் குழிவு இருக்கும்

tympan: (அச்சு) அழுத்துப் படலம்: திருப்பு கருவி அச்சிடும்போது காகிதம் மீது எழுத்துக்கள் நன்குபதிந்து அச்சிடுவதற்கான வகையில் தகுந்த அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அச்சு எந்திரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேலாக வைக்கப்படும் காகிதங்கள்

tympanum; (க.க) முகட்டுக் குமிழ்: கட்டடத்தின் மேற்புறத்தில் அலங்காரமாக முக்கோண வடிவில் அமைக்கப்படுகிற இடம்

type: (அச்சு:) அச்சு எழுத்து: உலோகத்தால் ஆன எழுத்து அச்சிடுவதற்குப் பயன்படுவது. இதன் உயரம். 0.918 அங்குலம்

type caster: (அச்சு.) அச்சு வார்ப்பு எந்திரம்: அச்சு எழுத்துக்களை வார்க்கும் எந்திரம்

type gauge: (அச்சு.) எழுத்து அளவி: அச்சுக் கோக்கப்பட்ட வாசகத்தில் எவ்வளவு வரிசைகள் உள்ளன என்று அளவிடுவதற்கு குறியீடு செய்யப்பட்ட மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன அளவி

type high: (அச்சு.) அச்சு உயரம் : அச்சு எழுத்தின் உயரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் இதன் உயரம் 0.918 அங்குலம்