பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63

றைகளும் இறைப்பான்கள் போன்று செயற்படுகின்றன

auriferous : பொன் தருகிற; பொன் விளைகிற : தங்கம் தருகிற அல்லது தங்கத்தை உட்கொண்டிருக்கிற ஒரு பொருள்

aurora : (விண்.) துருவ மின்னொளி: இதனை வடதுருவ, விண்ணொளி (aurora borealis) என்றும், தென்துருவ விண்ணொளி (aurora austratis) என்றும் கூறுவர். பூமியின் காந்தப்புலத்திலுள்ள புரோட்டான்கள் போன்ற மின்னேற்றிய துகள்கள், பூமியின் வாச மண்டலத்துடன் வினைபுரிவதன் மூலம் மிக உயரத்தில் உண்டாகும் மின்னொளி

austenite : (உலோ.) ஆஸ்டினைட்: பியர்லைட் உலோகம் வெப்பப் பெருக்கத் தாழ்நிலைக்கு மேல் உருமாறியிருக்கும் நிலை

austenitic alloy steels: (உலோ.) ஆஸ்டினைடிக் உலோகக் கலவை : எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு விசையுடையது; மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளது; காந்தத் தன்மையற்றது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் உலோகவியல் வல்லுநரான சர் ராபர்ட்ஸ் ஆஸ்டீன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது

autodyne receiver: (மின்.) தன் விசையழுத்த வானொலி : மின்னலைத் தடங்காண் கருவியையும். மின் அலைப்பியையும் பயன்படுத்தும் வானொலி அலைவாங்கி மின் சுற்றுவழி

autogenous welding : (பட்.) தன் முனைப்புப் பற்றவைப்பு : அழுத்தமூட்டுதலோ சம்மட்டியால் அடித்தலோ இல்லாமலும், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் இல்லாமலும் கடும் வெப்பத்தினால் உருக்கி இளக்குவதன் மூலமாகவே உலோகங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வகைப் பற்றவைப்பு முறை. எளிதில் உருகுவதற்காகச் சேர்க்கப்படும் கலவைப் பொருளும் பற்றவைப்புக் கோலும் பயன்படுத்தப்படுகின்ற வாயுப் பற்றவைப்பு முறைக்கும் இச்சொல்லமைப்புப் பொருந்தும்

autogiro : (வானூ.) சுழல் விமானம் : இது ஒரு வகைச் சுழல் விமானம். இதில் ஏறத்தாழ ஒரு செங்குத்தான அச்சில் காற்றியக்க விசைகளின் மூலமாகச் சுழல்கின்ற காற்றழுத்தத் தளங்களிலிருந்து விமானத்திற்கு பறக்கும் போது ஆதாரம் கிடைக்கிறது. அத்துடன் சமச்சீரான எதிர்ப்புறங்களிலுள்ள மேல்நோக்கிய தூக்காற்றல்

auto-intoxication : (உட.) தன்னஞ் சூட்டல்: உடலில் உற்பத்தியாகும் பொருள்களினாலேயே உடலில் ஏற்படும் நச்சுத் தன்மை

autolysis : (உட.) உயிரணு அழிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் உடலினின்றும் வடியும் ஊன் நீரால் அழிதல்

automatic : தானியங்கி: இயக்க விசை இணைப்புகளை எந்திரம் தானாகவே இயக்கிக் கொள்ளும் முறை. கையினால் இயக்கப்படாமல் ஒர் எந்திரம் தானாகவே இயங்கும்போது அது தானியங்கி எனக் கூறப்படுகிறது

automatic center punch : (எந்.) தானியங்கி மைய அழுத்து பொறி: இதில், கைப்பிடிக்குள் அமைந்