648
type metal: (அச்சு) அச்சு உலோகம்: ஒரு பங்கு ஈயம், இரு பங்கு ஆண்டிமணி, ஐந்து பங்கு காரீயம் ஆகியவற்றால் ஆன உலோகம்
type planer: (அச்சு.) எழுத்து சமன்படுத்தி: நல்ல கெட்டியான மரக்கட்டை சேரில் எழுத்துக்களை கலங்களாக அடுக்கிய பின்னர் எழுத்துக்களின் தலைகள் சமச் சீராக ஒரே மட்டத்தில் அமைய இக்கட்டை கொண்டு தட்டி விட்டுப் பிறகு கேஸை முடுக்குவர்
typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் : (டைபாய்டு). செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கேடும், நீண்ட நாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற ஒருவகை நச்சுக்காய்ச்சல். (படத்தில்) காணப்படும் ஒரு சிவப்பணுவின் பகுதியைக் காட்டுகிறது. இது 1000 மடங்கு பெரிது படுத்தப்பட்டதாகும்
'typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் படம்
typographer: (அச்சு) அச்செழுத்தாளர்: தலைமை அச்சாளர் அல்லது அச்சு எழுத்துக்களை வடிவமைப்பவர்
typographic: (அச்சு.) அச்சுக் கலை: அச்சுக்கலை தொடர்பாக
typography: (அச்சு.) அச்செழுத்தியல்: 1. அச்சுக்கோத்தல் அல்லது எழுத்துக்களை தக்கவாறு அடுக்குதல் 2. அச்சுக்கலை