பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
653


upset : (உலோ.) உலோக நிலை மாற்றம் : ஓர் உலோகத் துண்டின் நீளத்தைக் குறைப்பதன் மூலம் அதன் குறுக்கு வெட்டுப் பரப்பினை அதிகரிக்கும் முறை

uranium : (உலோ.) யுரேனியம் (விண்மம்) : அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம், கடினமான, தகடாக நீட்டக்கூடிய உலோகம். மிகு வேக எஃகுகளின் வலிமையினையும், விறைப்புத் தன்மையினையும் அதிகரிப்பதற்கு இது பயன்படுகிறது. இயற்கையான யுரேனியத்தில் U-235, U-238 என்ற இரு முக்கிய ஓரகத் தனிமங்கள் உள்ளன. இயற்கை யுரேனியத்தின் 140 பகுதியில் ஒரு பகுதி U-235 என்பதாகும்

urea : (குழை.) யூரியா : பால் உணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப் பொருள். இது யூரியா ஃபார்பால் டி ஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது

urea resin : (குழை.) யூரியா பிசின் : பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால்டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினை புரிவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது பதங்கெடுவதைத் தடுக்கக் கூடியது; எண்ணெய்ப் பசையைத் தடுக்க வல்லது; மேற்பரப்பு கடினத்தன்மை கொண்டது. இதனால், இது மின் பொருள்கள், பொத்தான்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

ureter : (நோயி.) மூத்திரக் கசிவு நாளம் : குண்டிக்காயிலருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம்

useful load : (வானூ.) இன்றியமையாச் சுமை : விமானத்தில் இன்றியமையாது தேவைப்படும் சுமை விமான ஊழியர்கள், பயணிகள், எரிபொருள் இதில் அடங்கும்

uterus : (உட.) கருப்பை : பெண்ணிடம் குழந்தை உருவாகும் உறுப்பு

கருப்பை

utility : பயனோக்கப் பண்பு : நடைமுறைப் பயனுடைய பண்பு அல்லது நிலை. நடைமுறைப் பயன் பாடுள்ள பொருள்