பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

655


இயந்திரம் (என்ஜின்) ஓடும்போது கார்புரேட்டரில் தோற்றுவிக்கப்படும் வெற்றிடத்தின் பலனாக வெற்றிடத் தொட்டியில் ஓரளவு வெற்றிடம் பராமரிக்கப்படுகிறது

vaccum gauge : (தானி.) வெற்றிட அளவுமானி : ஓர் இயந்திரத்தின் (என்ஜினின்) உள்வாங்கி பன்முனைக்குழாயில் அல்லது எரிபொருள் குழாயில் உள்ள வெற்றிடத்தை அளந்து கூறுவதற்கு, காற்று மண்டல அழுத்த அடிப்படையில் குறியீடுகள் செய்யப்பட்ட அளவுமானி

vaccum metalizing : (குழை.) வெற்றிட உலோகப் பூச்சு: ஆவியாக்கப்பட்ட அதாவது மின் நுண்திவலைகள் வடிவிலாக்கப்பட்ட உலோகத்தைக் (அலுமினியம்) கொண்டு, பிளாஸ்டிக் உறுப்புகள் மீது, மெல்லிய பூச்சு அளித்தல். இது வெற்றிடத் தொட்டியில் நிகழ்த்தப்படுகிறது. மின்சார இழை மூலம் ஆவியாக்கப்படுதல் நிகழ்த்தப்படுகிறது. உலோகக் குழம்பில் நிறம் சேர்க்கப்பட்டுத் தங்க, பித்தளை, அல்லது தாமிர நிறம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. இறுதி தயாரிப்புகளின் மேற்புறம் ஒரளவு உலோகத்தன்மை பெற்றிருக்கும்

vacuum plating : (உலோ.) வெற்றிட முலாம்பூச்சு : காற்று வெளியேற்றப்பட்ட ஓர் அறையில் வைத்து உலோக உறுப்புகளுக்கு முலாம் பூசுதல்

vacuum system : (குளி. பத. ) வெற்றிடச் சாதனம் : நீரை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதிக்க வைப்பதற்கு வெற்றிடத்தைப் பயன்படுத்தும் ஒரு குளிர்பதனச் சாதனம் (அல்லது)

vacuum system : (குளி. பத. ) வெற்றிட அமைப்பு : வெற்றிட உந்து (பம்ப்) வெற்றிடத் தொட்டி (அ) கலன், குழாய்கள் ஆகியவற்றைக் கொண்ட, வெற்றிடத்தை உருவாக்கும் ஒரு அமைப்பு. இந்த வெற்றிட அமைப்பு ஒரு அடைக்கப்பட்ட கலனில் அழுத்த வேறுபாட்டை உண்டாக்கி அதன் மூலம் ஒரு அறையில் (அ) கலனில் குறை வெப்பத்தை அல்லது குளிரை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது

vaccum tube : (மின்.) வெற்றிடக் குழாய் : வெற்றிட உந்து (பம்ப்) மூலம் வெற்றிடம் உண்டாக்கப்பட்டு பின் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடி மின்னனுக்குழாய். உள்ளிருந்து வாயு அல்லது ஆவி அகற்றப்பட்ட பின் மிச்ச மீதியாக சிறு அளவுக்கு இருக்குமானால் அதனால் மின் தன்மைகள் பாதிக்கப்படும் என்பதால், மின் தன்மைகள் பாதிக்கப்படாத அளவுக்கு முழுமையாக வெற்றிடமாக்கப்பட்ட மின்னனுக்குழாய்

vagina : (உட.) யோனிக் குழாய் : பெண்ணின் கருப்பைவாய்க் குழாய். பிறக்கும் குழந்தை இதன் வழியாகவே வெளியே வருகிறது

vagus nerve : (உட.) மூளை நரம்பு : மூளையின் கீழ்ப்பகுதியிலிருந்து தொண்டை, நுரையீரல்கள், இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு. துணைப்பரிவு நரம்பாகிய இது, சுவாசத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச் செய்கிறது

valence : (மின்.) இணைவுதிறன் : ஒரு தனிமத்தின் இணைவுறும் ஆற்றல் அளவு. ஒப்பீட்டளவில், ஹைட்ரஜன் அணுவுடன் ஒரு தனிமத்தின் பொருளணுவின் (பிற அணு நீக்கி) இணைவுறும் ஆற்றல் (அ) வீத அலகு

valence : (வேதி.) வேதியியல் இணைவுதிறன் : ஒரு தனிமத்தின் மூல அணு , ஒரு குறிப்பிட்ட நிலையான வீத அளவில், மற்றத் தனிமங்களுடன் அல்லது மற்ற தனிமங்களின் மூல அணுக்களுடன் இணையும் பண்பு

valley : (க.க.) கூரைப்பள்ளம் : இரு கூரைகளின் சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம் அல்லது அந்தச் சந்திப்பில் உள்ள வடி நீர்ப்பாதை

valley : (க.க.) பள்ளத்தாக்கு : மலைச்சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம் அல்லது மலைச்சரிவுகளின் சந்திப்பில் உள்ள வடி நீர்ப்பாதை

valley rafter : (க.க.) கூரைப் பள்ளச் சட்டம் : இரு கூரைகளின் சரிவு சந்திக்கின்ற பள்ளத்துக்கு அடியில் நெடுக அமைந்த சட்டம்

value : (வண்.) உயர் தகவு : ஒரு வண்ணத்தின் அழுத்தம், அல்லது மென்மையைக் குறிக்கும் தன்மை