பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
657

vapor lock : ஆவித் தடை : எரி பொருள் ஆவி சேர்ந்து விடுவதன் காரணமாக என்ஜினுக்கு எரி பொருள் வருவது தடைப்படுதல் அல்லது குறைதல்

vapor rectifier ; (மின்) ஆவித் திருத்தி : பாதரச ஆவியை அயனியாக்கம் செய்வதன் மூலம் மின் கடத்தல் நடைபெறும் திருத்திக் குழல்

variable : (கணி) மாறி : மதிப்பு மாறக்கூடிய அளவு அப்படி மாறும்போது மற்றவற்றின் மதிப்பு மாறாதிருக்கும்

variable condenser ; (மின்) மாறு மின்தேக்கி : சில வரம்புகளுக்கு உட்பட்ட மின்தேக்கி சில வரம்புகளுக்கு உட்பட்டு இதன் திறனை மாற்ற முடியும்

variable motion : (பொறி) மாறுபடு இயக்கம் : ஒரு பொருள் சரி சமமான தூரங்களை வெவ்வேறு கால அளவுகளில் கடக்குமானால் அது மாறுபடுத்தும் இயக்கம் எனப்படுகிறது

variometer : (மின்) கிளர்மின் மாற்றி : மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு

varnish : (வண் ) வார்னிஷ் : ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை ஒரு பரப்பின் மீது உறுதியான நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது. வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம்

varnish cambric : (மின். ) மெருகுத் துணி : மின்காப்பு மெருகு பூசப்பட்ட பருத்தித் துணி

varying speed motor : (மின்.) வேகம் மாறுபடும் மோட்டார் : செய் சுமைக்கு ஏற்ப வேகம் மாறுகின்ற மோட்டார். பொதுவில் செய் சுமை அதிகரிக்கும்போது வேகம் குறையும். எனினும் விரும்பியபடி வேகக்தை மாற்றத்தக்க மோட்டாரிலிருந்து இது வேறுபட்டது

vascular : (உட.) குருதி நாளம் சார்ந்த : குருதி நாளங்கள், உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர் பானவை. தாவரங்களில் குழல் திசு, வேர்த்திசு ஆகியவற்றின் மூலம் தாவரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு திரவங்கள் செல்கின்றன

vault :(க.க.) வளைந்த கூரை : அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை. வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம்

V belt: V வார்ப்பட்டை: விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை, உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு

V blocks: (எந்.) V பிளாக்குகள்: உருளை வடிவிலான உலோகப் பொருட்களைச் சோதிக்கும் போது அல்லது உருக்கொடுக்கும் போது நகராமல் இருப்பதற்காக ஒரு புறத்தில் V வடிவில் செதுக்குதல்

vector: (மின்.) வெக்டார்: மாறு திசை மின்சாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுகிற பகுதிகளை விளக்கிக் காட்டுகிற படம்

vee radiator: (தானி) V ரேடியேட்டர்: இரு பகுதிகளாகத் தயா