பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64

துள்ள விற்கருளால் கட்டுப்படுத்தப்படும் சம்மட்டியானது அழுத்தப்படும் போது போதிய விசையுடன் விடுபட்டு, உலோகத்தில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கி அதன் முத்திரையைப் பதிக்கும்

automatic choke : (தானி.எந்.) தானியங்கி அடைப்பு : உந்தினைக் கிளப்பும் போது தானாகவே அடைப்பு இயங்கக்கூடிய மின் விசையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சாதனம்

automatic circuit breaker : (மின்.) தானியங்கி மின் முறிப்பான்: மின்னோட்டத்தின் வலிமையானது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தகவான வரம்பினைத் தாண்டும் போது மின் சுற்றினை முறித்திடக்கூடிய ஒரு தானியங்கிச் சாதனம்

automatic clutch : (தானி.எந்.) தானியங்கி இறுக்கி : இயங்குறுப்புகளை வெற்றிடம் வாயிலாக ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைவு

automatic cognition : (தானி) தன்னுணர் திறன் : ஓர் எந்திரம் உற்பத்தி செய்யும் பொருளைப் பாதிக்கும் மாறியல் மதிப்புருக்களை உணர்ந்து கொள்ள அந்த எந்திரத்திற்குள்ள திறன்

automoticity . (தானி.) தானியங்கு திறன் : மனித ஆற்றலும் மூளையின் கட்டுப்பாடும் தேவைப்படும் கையால் இயங்கும் கருவிகள் போன்றவை தானாக இயங்குவதற்கு தேவையான குறைந்த அளவு திறன்

automatic cutout : (மின்) தானியங்கி வெட்டுவாய் : ஒரு மின் சுற்றிலிருந்து தக்க தருணத்தில் மின்னியல் உறுப்பு அலலது இணைப்பு எதனையும் அகற்றுவதற்கான ஒரு மின்னியல் அமைவு

automatic pilot : (வானூ) தானியங்கி வழிகாட்டி : ஒரு விமானம் பறப்பதைத் தானாகவே கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு முறை. இது முன்விசையும் எந்திர நுட்பமும் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியது

automatic propeller : (வானூ ) தானியங்கி விமான உந்து விசிறி : பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டுள்ள உந்து விசிறி

Automatic screw machine : தானியங்குத் திருகுப் பொறி: மரை யாணிகள், திருகாணிகள், செருகு வகைக் கப்பிகள் போன்ற சிறு உறுப்புகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதற்கான ஒரு பொறியமைவு. இதில், உலோகச் சலாகை, தேவையான எந்திரத்திற்கு ஏற்றவாறு எந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது அவ்வாறு செலுத்தியபின் எந்திர இயக்கம் தானாகவே நடைபெறுகிறது

automatic shift : (தானி.எந்) தானியங்கி திசை திருப்பி : பல்லிணைப்புகளை ஒரு வேகத்திலிருந்து மற்றொரு வேகத்திற்கு மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, செலுத்துப் பல்லிணைப்புக் கட்டுப் பாட்டு அமைவு. இது பெரும்பாலும் இறுக்கி மிதி கட்டையினை அமுக்குவதன் மூலம் செய்யப்படுகிறது

automatic spark control : (தானி; எந்,) தானியங்கி பொறி வினைக் கட்டுப்பாடு : மின்விசை அல்லது எந்திர விசையிலான வெற்றிடம் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விசை அமைவு. இதன்