பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

660

vernier: (எந்.) வெர்னியர்: ஒரு நிலையான அளவு கோலின் உட் பிரிவுகளின் பின்னப் பகுதிகளைக் கணக்கிட்டு அறிவதற்குப் பயன்படும் ஒரு சிறிய நகரக்கூடிய துணை அளவுகோல்

vernier depth gauge: (எந்) பெர்னியர் ஆழ அளவி: வெர்னிய ருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகைச் சலாகை வடிவ அளவு கருவி. இது குறுகலான ஆழப் பகுதிகளின் ஆழத்தை அளந்தறியப் பயன்படுகிறது

vernier caliper: (உலோ) வெர்னியர் திட்பமானி: திட்பமானியில் விட்டம், திட்பம், ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களையுடைய அளவு கருவி

vertical: (கம்) செங்குத்து நிலை: செங்கோட்டு நிலை; வான விளிம்புக்குச் செங்கோணத்திலுள்ள நிலை

vertical boring mill: (எந்.) செங்குத்துத் துளைக்கருவி: கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல்_மேசையில், இழைப்புளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் நகர்த்தி கடைசல் வேலை செய்வதற்கான கருவி

vertical centering: நிலை குத்து மையம்: தொலைக் காட்சிப் பெட் டியின் திரையில் படத்தை செங் குத்தாக நிலைப்படுத்துவதற்கு உதவும் கட்டுப்பாட்டு அமைவு

vertical lathe: (எந்) செங்குத்துக் கடைசல் எந்திரம்: பக்கவாட்டில் தலைப்பக்கம் உடைய ஒரு செங்குத்துத் துளைக்கருவி

vertical polarization :(மின் ) செங்குத்துத் துருவ முனைப்பாக்கம்: வானலை வங்கியின் மின்தலம், பூமியின் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானலை வாங்கி

vertical tall area : (வானு ) செங்குத்து வால் பகுதி : விமானத்தில், சுக்கானின் உள்ளபடியான புறக்கோட்டுக்கும், செங்குத்துத் தளத்தில் நீடடிக் கொண்டிருக்கும் நிமிர் நேர் விளிம்புக் குட்டையிலான பகுதி

vertimeter : (வானு) செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியாகும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது

vestibule : (க.க ) முன் கூடம் : வீட்டின் முன் அறை, திருக் கோயில் முக மண்டபம்

viaduct : (பொறி.) மேம்பாலப் பாதை: இருப்புப் பாதை சாலை போன்றவற்றுக்கு மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலம்

viaduct : (க.க.) மேம்பாலம்: மலை இடுக்கின் அல்லது பள்ளத் தாக்கின் மேலாக சாலைக்காக அல்லது இருப்பூர்திக்காக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதை

vibrating bell: (மொன்) அதிர்வு மணி: மணியடிக்கும் நா அல்லது சுத்திய உடைய ஒரு மின்சாதனம். இதன் வழியே மின்னோட்டம் பாயும் போது நா அல்லது சுத்தி ஒரு மணியைத் தட்டி ஒலி எழுப்பும். இது மின்காந்த தீர்ப்புத் தத் துவத்தின் படி இயங்குகிறது

vibrating reed meter (மின் ) அதிர்வுக்கோல் மானி: இயற்கையான அதிர்வு அலைவெண் களுடைய கோல்களைப் பயன் படுத்தும் ஒரு வகை அலைவெண் அளவுமானி

vibration dampeners : (தானி) அதிர்வுத் தளர்வுறுத்தி : ஒரு கோட்