பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
661

டச் சுழல் தண்டின் அதிர்வினைக் குறைப்பதற் காகப் பயன்படுத்தப்படும் எதி எடை அல்லது சமநிலைப்படுத்தும் கருவி

vibrator : (மின்) அதிர்ப்பி: சீரான நிலையிலுள்ள் நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படும் காந்தத்தினால் இயங்கும். அழைப்புமானி அலலது மின்சார அழைப்புக் கருவி போன்ற ஒரு சாதனம்

vibrator coil : (மின்) அதிர்வுச் சுருள் : ஒருவகை தூண்டுச் சுருள். உள்ளிட்டின் காந்தத் தன்மையானது, அடிப்படைச் சுற்று வழியினை முறிக்கும் வகையில் இயங்குமாறு இது அமைக்கப்படடிருக்கும்

vibrios: (நோயி..) வளைவுக் கிருமிகள் : நீந்துவதற்கான ஒரு வாலையுடைய சலாகை போல் வளைந்த உருவமுடைய பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது (1000 மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டுள்ள ஓர் இரத்த உயிரணுவை இந்த வட்டம் காட்டுகிறது)

video : ஒளிக்காட்சி : படம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகையின் பகுதி. அமெரிக்காவில் தொலைக் காட்சியையும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

video signal :(மின்) ஒளிச் சமிக்ஞை : தொலைக்காட்சிச் செலுத்தியில் அலைமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப் படக் கருவியிலிருந்து வரும் மின்னியல் சமிக்ஞை

viewing miror : காட்சிக்கண்ணாடி: தொலைக்காட்சியில், படக்குழாயில் உருவாகும் உருக்காட்சி யை, பார்வையாளர்கள பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி

vignette : (க.க.) சித்திர வேலைப்பாடு : தளிர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு; முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு; முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூ வேலை ஒப்பனைக் கோலம்; பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலைப்பாடு: பெயர்ப் பக்க அடிவரிப் பூ வேலைப்பாடு

vinyl acetal resins : (வேதி; குழை) வினில் அசிட்டால் பிசின் : பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படுகிறது. இது விறைப்புடையது; ஒட்டுத் தன்மை கொண்டது; ஈரம் புக இடமளிக்காதது; ஒளியாலும் வெப்பத்தாலும் நிலை குலையாதது

vinylidene chloride resins : (வேதி) வினிலிடின் குளோரைடுப் பிசின் : கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்து ஊர்திகளில் இருக்கைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உராய்வுச் சக்கரங்களுக்குப் பிணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது

vinyl resin : (குழை.) வினில் பிசின்; பிசின் குடும்பத்தில் ஒரு முக்கியமான வகை

virus : (நோயி.) நோய்க் கிருமி (நோய் நுண்மம்) : மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண்